பகுதி - 50
திருமுருகன் வழிபாட்டை விநாயகர், தேவி, சிவன் என்று எல்லோருடனும் சேர்த்துச் செய்பவரான குருநாதர் இந்தப் பாடலில் முருகனுடைய மாமனான திருமாலைத் துதிக்கிறார்
வேல் விருத்தம் ஏழாம் பாடல்
திருமுருகன் வழிபாட்டை விநாயகர், தேவி, சிவன் என்று எல்லோருடனும் சேர்த்துச் செய்பவரான குருநாதர் இந்தப் பாடலில் முருகனுடைய மாமனான திருமாலைத் துதிக்கிறார்.நான்கடிப் பாடலில் இரண்டடிகள் திருமால்தான்.
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
Advertisement
அநந்தமா யினுமேவினால்
அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
அறியாது சூரனுடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியு மதுசெங்
கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
தானவாந் தகன்மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையுங் கடலாடை
மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
வாகைத் திருக்கை வேலே.
மூன்றாமடியில் திருமாலின் பஞ்சாயுதங்கள் பேசப்படுகின்றன. அடுத்ததாக ஆதிசேடன், அடுத்ததில் சீதேவி, பூதேவி… இப்படி திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள திருமாலின் மருகனாகிய குகனுடைய கைவேலைப் பாடல் பேசுகிறது. நாளைக்கு விரிவாகக் காண்போம்.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/230612867&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>