பகுதி - 52
தனக்கு முந்தைய பல புலவர்களை, குறிப்பாக முருகன் புகழ் பாடிய புலவர்களைத் தம் பாடல்களில் விவரமாக அமைத்துப் பாடியுள்ளார் குருநாதர்.
தனக்கு முந்தைய பல புலவர்களை, குறிப்பாக முருகன் புகழ் பாடிய புலவர்களைத் தம் பாடல்களில் விவரமாக அமைத்துப் பாடியுள்ளார் குருநாதர். இந்தப் புலவர்களின் வரிசையில்தான் ‘கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன்’ என்று சொல்லி, கடைசியில் ‘முட்டை’யையே பாடிவிட்ட பொய்யாமொழிப் புலவரைத் தன் பாடலில் குறித்திருப்பதை இதற்கு முன்னால் உற்பாதப்பூ பாடலை விளக்கும்போது பார்த்தோம். இப்படி இன்னும் இரண்டு பாடல்களில் பொய்யாமொழிப் புலவரைப் பாடியிருக்கிறார். நம் குருநாதருடைய மனத்துக்குகந்த இன்னொரு புலவர், திருமுருகாற்றுப் படை பாடிய நக்கீரர். திருவகுப்பில் ஒன்றாகிய வேல் வகுப்பில்,
பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்
என்று நக்கீரரைக் குறித்த ஒரு புராணச் செய்தியைச் சொல்வார். அவர் சிறைப்பட்டிருந்த மலைக்குகையை இடித்து வழியை உண்டுபண்ணியது ‘படைநடத்து குகன் வேலே’ என்று முடிப்பார். வேல் விருத்தத்தின் இன்றைய எட்டாம் பாடலிலும் நக்கீரர் இடம் பெறுகிறார். வடமொழியும் தமிழும் கலந்த நடையில் இன்றைய பாடலில் சிவபெருமான் இடம்பெறுகிறார். விநாயகரும் கைகோக்கிறார். பாடலைப் பாருங்கள், கேளுங்கள்:
Advertisement
வேல்விருத்தம் எட்டாம் பாடல்
மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார்பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச்சி றைவிடுத்
தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர்சொற் றுதிபெற்றுநா
உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்
சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்
சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா
தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.
</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/230613143&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"> </p><p> </p>