முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 54

வேல் விருத்தத்தின் ஒன்பதாம் பாடலை இன்று எடுத்துக் கொள்கிறோம். இன்றைய பாடலில் பெரிய அளவில் இடம்பிடிப்பது மயில்.

Updated On : 6 நவம்பர், 2015 at 3:01 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:00 PM

வேல் விருத்தத்தின் ஒன்பதாம் பாடலை இன்று எடுத்துக் கொள்கிறோம். இன்றைய பாடலில் பெரிய அளவில் இடம்பிடிப்பது மயில். இந்தப் பாடல்களின் வரிசையில் முதன்முதலாக மயிலின் பெருமையை விரித்துக் கூறத் தொடங்குகிறார். இதைத் தொடரப் போகும் மயில் விருத்தத்துக்கான ஒரு ஆரம்பமாக இதைக் கொள்ளலாம். ஆதிசேடனைத் தன் அலகில் கொத்தி உதறும் மயிலின் தரிசனத்தை இந்தப் பாடலில் காட்டுகிறார்.

தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
சண்டப்ர சண்ட மயிலாம்
என்று மயில் விருத்தத்தின் எட்டாம் பாடலில் இந்தக் காட்சி விரிவடையும்.

இனி இன்றைய ஒன்பதாம் பாடலைப் பார்ப்போம், கேட்போம்:

தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை யமுதம் வாய்கொள்


செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து
சேவடி பிடித்ததெனவும்

Advertisement


நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்


நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும்
நிகழ்கின்ற துங்கநெடுவேல்


ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்
றடலெரிக் கொடிய உக்ர


அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்
கரசினைத் தனியெடுத்தே


சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்
றாய்திமித் துடனடிக்குஞ்


சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
சண்முகன் தன்கை வேலே.

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/231802884&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.