முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 55

வேல் விருத்தம் ஒன்பதாம் பாடலைப் பிரித்துப் பொருள் காண்போம். பாடலுக்குள் நுழைவதன் முன்னர் ஒன்று:

Updated On : 6 நவம்பர், 2015 at 3:03 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:00 PM

வேல் விருத்தம் ஒன்பதாம் பாடலைப் பிரித்துப் பொருள் காண்போம். பாடலுக்குள் நுழைவதன் முன்னர் ஒன்று: பாடலில் கடலும் மலைகளும் மேகங்களும் இன்னபிறவும் வேலை வணங்குகின்றன. காட்சிகள் விரிவடைவதைக் காண்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

தேடுதற்கு அரிது ஆன நவமணி அழுத்தி இடு செம் கரனை அமுதம் வாய் கொள்

செங்கரன், செம்கரன்: சூரியன். அமுதம்வாய், அமுதவாய்: மேகம், கொள்: உண்ண

செயம் அளித்து அருள் எனக்கு என உவப்பொடு வந்து சேவடி பிடித்தது எனவும்

எனக்கு வெற்றி தந்தருள்வாய் என்று மகிழ்ச்சியோடு வந்து சிவந்த திருவடிகளைப் பற்றிக் கொண்டன என்னுமாறும்,

நீடு மை கடல் சுட்டதிற்கு அடைந்து எழு கடலும் நீ எமைக் காக்க எனவும்

பெரிய கரிய கடல் ஏழும், வேலால் சுடப்பட்டு வற்றடிக்கப்பட்ட காரணத்தால், ‘இனியெங்களை அழிக்காமல் காக்க வேண்டும்’ என்று துதித்தன என்னுமாறும்,

நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடு வேல்

நிபிடம்: nibida என்கிற வடசொல். நெருங்கிய, அடர்த்தியான (thick, dense) என்று பொருள்படும்.

ஆடும் மை கணபண கதிர் முடி புடை எயிற்று அடல் எரி

ஆடுகின்ற, கரிய கூட்டமான ஒளிவிடும் கிரீடங்களை உடைய புடை: பக்கங்களில், எயிற்று: பற்களையுடைய, அடல் எரி: வலிய தீ,

கொடிய உக்ர அழல் விழி படு கொலை கடைய கட்செவியினுக்கு அரசினை தனி எடுத்தே

கொடியதும் உக்கிரமானதுமான தீ வெளிப்படுகின்ற கொடிய கொலைத்தன்மையுடைய, கட்செவி: கண்ணையே செவியாகக் கொண்ட பாம்புக்கு அரசனான ஆதிசேடனைத் தனியாக (பாம்புக் கூட்டத்திலிருந்து பிரித்து) எடுத்து

சாடும் மைப்புயல் எனப் பசுநிற சிகரியில் தாய் திமித்துடன் நடிக்கும்

அடித்து உதறுவதான கரிய மேகம் (புயல்: மேகம்) பசுநிற: பச்சை நிற, சிகரி: மலை, தாய்: தாவி, திமித்துஉடன்: திமித்த தாளத்துடன், நடிக்கும்: ஆடும்

சமர மயில் வாகனன் அமரர் தொழும் நாயகன் சண்முகன் தன்கை வேலே.

சமர: போரில் (வல்ல) மயிலை வாகனமாகக் கொண்டவனும் தேவர்கள் தொழும் தலைவனுமான ஆறுமுகனுடைய திருக்கரத்திலுள்ள வேலே அது.

தேடுதற்கு அரிதான நவமணி ... எவ்வளவு தேடினாலும் கிடைப்பதற்கு அரிய நவமணிகளை*,

(* நவமணிகள்: கோமேதகம், நீலம், பவளம், மாணிக்கம், மரகதம், முத்து, புஷ்பராகம், வைடூரியம், வைரம் ஆகியவை)

அழுத்தி இடு ... உள்ளே பதித்தைப்போல ஒளிவிடும்,

செம் கரனை ... சிவந்த கிரணங்களை உடைய சூரியனை,

அமுதம் வாய் கொள் ... மழை மேகம் கவிந்து மூடும்படியாக,

செயம் அளித்து அருளென உவப்போடு வந்து ... களிப்புடன் வந்து, எனக்கு வெற்றியைத் தர வேண்டும் என பிரார்த்தித்து,

சேவடி பிடித்ததெனவும் ... வேலாயுதத்தின் திருவடிகளைப் பிடித்து எனவும்,

(நவமணிகளை அழுந்தப் பதித்ததைப்போல பிரகாசிக்கின்ற சூரியனை, மழைமேகங்கள் கவிந்து சூழ்ந்து மறைத்து, எனக்கு வெற்றியை அளித்தருள வேண்டும் என்று கடல்கள் ஒன்று சேர்ந்து முருகனுடைய திருவடியைப் பற்றிக் கொண்டன. அந்தக் கடல்கள் அவ்வாறு பற்றிக் கொள்ள இன்னொரு காரணமும் உண்டு)

நீடு மை கடல் சுட்டதற்கு ... மிகப் பெரியதும் மைபோலக் கரியதுமான கடல், வேலால் (சூரசம்ஹாரத்தின் போது) சுடப்பட்டதனால் வருந்திய

அடைந்த எழு கடலும் ... ஏழு கடல்களும் வேலாயுதத்தை சரணடைந்து,

நீ எமைக் காக்க எனவும் ... எங்களைக் காப்பாற்று என்று வேண்டவும்,

நிபிட முடி நெடிய கிரி ... அடர்த்தியாகவும் நெருக்கமாகவும் உள்ள சிகரங்களைக் கொண்ட பெரிய மலைகள்,

எந்தமைக் கா எனவும் ... (முன்பு நீ மலைகளைத் தூளடித்தவன், ஆகையாலே எங்களையும் தூளடிக்காமல்) காப்பாற்ற வேண்டும் என்று வேண்டவும்,

நிகழ்கின்ற துங்க நெடு வேல் ... விளங்குவதாகிய தூய நெடிய வேல்

(அப்படிப்பட்ட வேல் யாருடையதோ என்றால்)

ஆடு ... ஆடுகின்றதும்,

மை கணபண ... கருமை நிறைந்ததும் கூட்டமானதுமான ஆயிரம் தலைகளில்

கதிர் முடி ... ஒளிவிடும் கிரீடங்களைக் கொண்டதும்,

புடை எயிற்று ... வாயின் பக்கங்களிலுள்ள பற்களில்,

அடல் எரி கொடிய உக்ர தழல் விழி ... வலிமையான கொடிய நெருப்பை வீசுவதும் நெருப்பை உமிழும் கண்களைக் கொண்டதும்,

படு கொலை ... பெரிய கொலைகளை,

கடைய கட்செவியினுக்கு அரசினை ... செய்யக்கூடியதுமான பாம்பரசனான ஆதிசேஷனை,

தனி எடுத்தே ... (பாம்புக் கூட்டங்களிலிருந்து) தனியாக எடுத்து,

சாடுமைப் புயலென ... வேகமாக அடித்து உதறும் கருமேகத்தைப் போல,

பசு நிறச் சிகரியில் ... பசுமை நிறைந்த மலை உச்சியில்,

தாய் ... தாவி மிதித்து,

திமித்த நடிக்கும் ... (அடிஎடுத்து வைப்பதால்) திமித் திமித்தென தாளம் முழங்கும்படியாக ஆடுகின்ற,

சமர மயில் வாகனன் ... போரில் வல்லமை கொண்ட மயிலை வாகனமாக உடையவனும்,

அமரர் தொழும் நாயகன் ... தேவர்கள் வணங்கும் தலைவனுமாகிய

சண்முகன் தன் கை வேலே ... ஆறுமுகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதமே அது.

மேகங்களும், கடல்களும், மலைகளும் ஒவ்வொரு காரணத்துக்காக வந்து சரண்புகுந்து எங்களைக் காத்தருள வேண்டும் என்று அடைக்கலம் புகுகின்ற தன்மை உடையவனுடைய கைவேல் (யாருடையது என்றால்)

கொடுமை நிறைந்த பற்களையும், உக்கிரமான கண்களையும் உடைய பல தலைகளைக் கொண்ட ஆதிசேடனை எடுத்து உதறி, மலைகளின் மேலே பாய்ந்து, தாள ஒலியெழும்படி நடனமிடும் மயிலை வாகனமாகக் கொண்டவனின் கரத்தில் உள்ள வேலேயாகும்.

வேலும் மயிலும் துணை என்பதற்கேற்ப இந்தப் பாடலில் வேலும் மயிலும் போற்றப்பட்டு விளங்குகின்றன. மலை உச்சியில் ஆதிசேஷனை தூக்கி எடுத்து மிதித்து நடனமாடுவதை யோகபரமான பொருளைக் காணலாம். சுழுமுனையாகிய மலையின் உச்சியில் குண்டலிணி சர்ப்பத்தை அடக்கி மகாமாயையான விந்துவான மயில் பரமானந்த நடனம் ஆடுகிறது என்று இந்தப் பாடலைப் பெரியோர் விளக்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.