முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 56

படிப்பதற்குச் சற்று சிரமமான பாடலென்றாலும், முறையாக, நிதானமாக, சீர்சீராகச் சொல்லிப் பயிற்சி செய்தால் சிரமமின்றிச் சொல்ல முடிகின்ற ஒன்றுதான்.

Updated On : 6 நவம்பர், 2015 at 3:35 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:01 PM

வேல் விருத்தத்தின் பத்தாவதும் இறுதியானதுமான பாடல், நாவை வளைத்து வேலை வாங்குவது. இதில் ஒவ்வொரு அடியிலும் 2, 6, 10, 14, 18, 22, 26ம் எழுத்துகள் நெடிலாக இருப்பதைக் காணலாம். மெய்யெழுத்து ஒவ்வொரு அடிக்கும் கடைசியில் மட்டும் பயில்வதையும், ஒருசில இடங்களில் மட்டுமே இடையில் வருவதையும் கவனிக்கலாம். (படிக்கும் வசதிக்காகப் பிரித்திருக்கும் இடங்களில் மெய்யெழுத்து இருக்கும். அவை கணக்கில் வராதவை.)

படிப்பதற்குச் சற்று சிரமமான பாடலென்றாலும், முறையாக, நிதானமாக, சீர்சீராகச் சொல்லிப் பயிற்சி செய்தால் சிரமமின்றிச் சொல்ல முடிகின்ற ஒன்றுதான். நெட்டெழுத்துகள் சுழன்று சுழன்று வந்தாலும், ‘சிலாவட’ என்று தொடங்கும் இரண்டாம் அடியில், கலாவிநோத என்பது கலாவிநொத என்றும், முகாவிலோசனா என்பது முகாவிலொச னா என்றும் குறுகியிருப்பது குறுக்கல் விகாரம் எனப்படும். சற்றுப் பிடிவாதத்துடன் பயிலும் எவருக்கும் இந்தப் பாடல் எளிதாகச் சொல்ல வரும் ஒன்றுதான்.

வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
மாலறியு நாலு மறைநூல்

Advertisement


வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
மநோலய உலாசம் உறவே


உலாவரு கலோலம கராலய சலங்களும்
உலோகநிலை நீர்நிலையிலா


வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
உலாவிய நிலாவு கொலைவேல்


சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
னாசின சிலாத ணிவிலா


சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்


விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்


விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
வேழம்இளை ஞன்கை வேலே.

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/231805029&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.