முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 62

இறைவன் போர்க்கோலம் கொண்டவன் என்பதனாலே இவன் தொடர்பான எல்லாமே அண்டங்கள் நடுநடுங்க, கிடுகிடுக்க உலாவருபவை.

Updated On : 13 நவம்பர், 2015 at 2:48 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:03 PM

மஹாசஷ்டியான இன்று மயில்விருத்தத்தின் இரண்டாம் பாடலைப் பார்க்கிறோம். இந்த இறைவன் போர்க்கோலம் கொண்டவன் என்பதனாலே இவன் தொடர்பான எல்லாமே அண்டங்கள் நடுநடுங்க, கிடுகிடுக்க உலாவருபவை. மானை அடித்து வீழ்த்திக் கவ்வும் அதே வாயால்தான் புலி தன் குட்டியைக் கவ்வி எடுக்கிறது. இரண்டுமே மாமிச வடிவங்கள்தாம் என்றாலும், இரண்டையும் கவ்வுவது அதே கூர்மையான பற்களையுடைய வாயால்தான் என்றாலும், தன்குட்டியைக் கவ்வும்போது சிறுகீறலும் ஏற்படாமல், பொட்டு ரத்தமும் கசியாமல் புலி கவ்வி எடுக்கிறது. முன்னது கொலைக் கவ்வல், பின்னது ஆதரவுக் கவ்வல்.

வேல், உலகைக் கலக்குபவர்களை எதிர்த்து உறுக்கியெழுகிறது; அன்பர்களைச் சுற்றிலும் நின்று எப்போதும் காக்கிறது. மயில் உலகம் கிடுகிடுக்க, மலைகளைத் தூளடித்துப் பறக்கிறது; அன்பர்களுக்குத் துயரம் நேருகையில் அதே வேகத்தில் வந்து அந்தத் துயரத்தைத் துகளடிக்கிறது. இரண்டு சமயங்களிலும் நிலவும் உக்கிரம் ஒன்றே, ஒன்று தாக்கக் கடிவது, இன்னொன்று காக்கக் கனிவது. சக்ரவாளகிரியைத் துகளடித்துப் பறக்கும் மயிலை குருநாதர் இந்தப் பாடலில் பாடுகிறார். இந்தப் பாடலின் கடைசியடியில் வரும் கல்லார கிரி என்பது செங்கழுநீர் மலை எனப்படும் திருத்தணிகை.

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி

Advertisement

பட்டுக் ரவுஞ்ச சயிலந்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு

தனிவெற்பும் அம்புவியும்எண்


திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு

சித்ரப் பதம்பெயரவே


சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்

திடுக்கிட நடிக்கு மயிலாம்


பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி

பத்மப் பதங் கமழ்தரும்


பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய

பரம உபதேசம் அறிவிக்


கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு

கந்தச்சுவாமி தணிகைக்


கல்லார கிரியுருக வருகிரண மரகத

கலாபத்தில் இலகு மயிலே.

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/232870685&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.