முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 63

அண்டங்களுக்கு வெளிச்சுவராகக் கருதப்படும் மலை சக்ரவாளகிரி. வட்டவடிவமானது. எல்லா அண்டங்களையும் சூழ்ந்த சுவர்போன்றது, பூவுலகுக்கு அச்சாணி போன்றது

Updated On : 13 நவம்பர், 2015 at 2:48 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:04 PM

பதச் சேதம்

சொற் பொருள்

சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளிபட்டுசக்ர: சக்கரவாள, ப்ரசண்ட: வலிமை நிறைந்த, கிரி: மலை, முட்டக் கிழிந்து: அடியோடு தகர்ந்து, வெளிபட்டு: வெட்டவெளியாக மாற
க்ரவுஞ்ச சயிலம்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு தனி வெற்பும் அம்புவியும்
கிரவுஞ்ச மலை பொடிபட, பெரிய பொன்மயமான சிகரங்களை உடைய மேரு மலையும், ஏழு குலபர்வதங்களும், உலகமும்
எண் திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு சித்ரப் பதம் பெயரவேஎட்டுத் திசைகளும், பரந்த மலைகளும் (குவடு: மலை) ஒக்கக் குலுங்க: ஒன்றேபோல் (ஒத்து) ஒன்றாகக் குலுங்க. சித்ரப்பதம்: அழகிய பாதம்; பெயர: அடியை எடுக்க (தூக்க. பூமியில் பதிய வைப்பதற்கு முன்னால்)
சேடன்முடி திண்டாட ஆடல் புரி வெம் சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம்ஆதிசேடனுடைய முடிகள் திண்டாடும்படியாக, ஆடல்: போர், வெம்சூரர்: கொடிய அசுரர்கள். நடித்தல்: நடனமாடுதல்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசும் கவுரி பத்ம பதம் கமழ் தரும்பக்கம்: இடது பாகத்தில் ஒன்றியிருக்கும் பச்சை நிறமுடையவளான கௌரியின் தாமரைப் பாதங்களின் மணம் வீசுவதான
பாகீரதிச் சடில யோகீசுரர்க்கு உரிய பரம உபதேசம் அறிவிக்-கைக்குச்கங்கையை உடைய ஜடாமுடி கொண்ட யோகீஸ்வரரான சிவன். சிவனுக்கு உரிய பரம உபதேசமான பிரணவப் பொருளை அறிப்பதற்காக,
செழும் சரவணத்தில் பிறந்த ஒரு கந்தச்சுவாமிசெழுமையான சரவணப் பொய்கையில் பிறந்த கந்தனாகிய சுவாமி
தணிகைக் கல்லாரகிரி உருக வரு கிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே.திருத்தணிகை மலையில் இருப்பதான செங்கழுநீர்மலை (கல்லார கிரி) உருகும்படியாக ஒளிவீசும் பச்சைத் தோகையோடு விளங்குகின்ற மயிலே.

சக்ர ப்ரசண்ட கிரி ... சக்ரவாளம் என்னும் பெரிய வலிமை
உடைய மலை,

(அண்டங்களுக்கு வெளிச்சுவராகக் கருதப்படும் மலை சக்ரவாளகிரி. வட்டவடிவமானது. எல்லா அண்டங்களையும் சூழ்ந்த சுவர்போன்றது, பூவுலகுக்கு அச்சாணி போன்றது)

முட்டக் கிழிந்து ... முற்றிலும் சிதறிப்போய்,

வெளி பட்டு ... (மலை இருந்த இடம்) வெட்டவெளியாக மாறவும்,

க்ரவுஞ்ச சயிலம் தகர ... கிரவுஞ்ச மலை தகர்ந்து பொடிபடவும்,

தாரகாசுரனுக்குத் துணையாக இருந்த மாயத்தில் வல்ல அசுரன் கிரவுஞ்ச பர்வதத்தின் வடிவில் நின்றான். அந்த மலை, மயில் அடியை எடுத்ததும் துகள் பட்டது)

பெரும் கனகச் சிலம்பும் ... பெரியதும் பொன்மயமானதுமான சிகரங்களை உடைய மேருவும்,

(சிலம்பு என்பதையே மலை என்ற பொருளில் பயன்படுத்துகிறார். எழுகடலும் எண்சி லம்பும் நிசிசரரும் என்று [அனைவரும் மருண்டருண்டு] திருப்புகழில் காணலாம் எண்சிலம்பு என்றால் எட்டு மலைகளும்)

எழு தனி வெற்பும் ... சூரபத்மனுக்குத் துணையாக நின்ற ஏழு மலைகளும்,

அம்புவியும் ... அழகிய பூவுலகும்,

எண் திக்கு தடம் குவடும் ... எட்டுத் திசைகளிலும் உள்ள குலபர்வதங்கள் எட்டும்,

ஒக்க குலுங்க ... ஒன்றுபோல ஒத்து, ஒரேசமயத்தில் குலுங்கவும்,

வரு சித்ரப் பதம் பெயரவே ... அடியெடுத்து வைக்கின்ற அழகிய பாதத்தை உயர்த்திய உடனேயே (அடியை எடுப்பது ஒன்று, அடியை வைப்பது பிறிதொன்று. மயில் அடியை இன்னமும் வைக்கவில்லை, எடுக்கத்தான் எடுத்திருக்கிறது. அடியை எடுத்ததுமே இத்தனை மலைகளும் இந்த விதங்களில் பொடிபடுகின்றன)

சேடன் முடி திண்டாட ... ஆதிசேஷனின் திருமுடிகளெல்லாம் குலைந்து கலங்குமாறு,

ஆடல் புரி வெம் சூரர் ... போர் புரியும் கொடிய அசுரர்கள்,

திடுக்கிட நடிக்கும் மயிலாம் ... திகைத்து நடுக்கம் கொள்ளுமாறு நடனமாடும் மயிலாகும்

(இப்படிப்பட்டது யாருடைய மயில் என்றால்)

பக்கத்தில் ஒன்று படு ... தன்னுடைய இடதுபக்கத்தில் தன்னோடு ஒன்றியிருப்பவளான,

பச்சைப் பசும் கவுரி ... மரகதப் பச்சை நிறத்தவளான கௌரியுடைய,

பத்மப் பதம் கமழ் தரும் ... தாமரைப் பாதங்களின் மணம் வீசுவதான,

பாகீரதி சடில ... பகீரதியை (கங்கையை) அணிந்துள்ள ஜடாமுடி கொண்டவரான, உடைய,

யோகீசுரர்க்கு ... யோக மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு

(தலையிலே கங்கையைத் தரித்தீரோ என்று ஊடல் கொண்ட உமையம்மையின் பாதத்தில் விழுந்து வணங்கியதால், உமையின் பாதத்தில் வீசும் நறுமணம் சிவனுடைய ஜடாமுடியில் நிறைந்துள்ள—ஊடலுக்குக் காரணமான—கங்கையில் வீசுகிறதாம்! இப்படிப் பணிந்து ஊடலைத் தணிப்பவர் யோகீசுரராம். மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது.)

உரிய பரம உபதேசம் அறிவிக்கைக்கு ... உரியதான பிரணவத்தை உபதேசிப்பதற்காக,

செழும் சரவணத்தில் பிறந்த கந்த சுவாமி ... வளமான சரவணப்பொய்கையில் அவதரித்த கந்தக் கடவுளின்,

தணிகை ... திருத்தணிகையில்,

கல்லார கிரி உருல ... செங்கழுநீர்மலை உருகும்படி,

வருகிரண ... போரொளி பொருந்திய,

மரகத ... மரகத நிறம் உடைய,

கலாபத்தில் இலகு மயிலே ... தோகையை உடைய மயிலே அது.

மயிலின் பாதம் பெயர்ந்ததும் ஏற்படும் அதிர்ச்சியலையால் மலைகள் பொடிபடுகின்றன. இந்த மயில்தான் ஆதிசேடன் அஞ்சுமாறு போர்புரிகின்ற சூரர்கள் திகிலடையுமாறு நடமிடும் மயில்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.