பகுதி - 67
மயில் விருத்தத்தின் நான்காம் பாடல் இது.
மயில் விருத்தத்தின் நான்காம் பாடல் இது.
பதச் சேதம் | சொற் பொருள் Advertisement |
யுக கோடி முடிவில் மண்டிய சண்டமாருதம் உதித்தது என்று அயன் அஞ்சவே | யுககோடி: யுகத்தின் கடைசியில், இறுதியில் (இந்தக் கோடி, அந்தக் கோடி என்பதைப் போல) மண்டிய: அடர்ந்த, திரண்ட, சண்டமாருதம்: வலிய காற்று, யுகாந்த காலத்துச் சூறாவளி, அயன்: பிரமன். |
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள லோகமும் | அண்டர் அண்டம்: தேவர் உலகம், |
பொன் குவடு உறும் வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து இரு விசும்பில் பறக்க | பொன்குவடு: பொற்சிகரம், இருவிசும்பு: நீண்ட வானம் |
விரிநீர் வேலை சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை வீசிப் பறக்கு மயிலாம் | விரிநீர்: பரந்த நீரை (உடைய) வேலை: கடல், சுவற: வறள, சுரர்: தேவர் |
நககோடி கொண்ட அவுணர் நெஞ்சம் பிளந்த நரகேசரி முராரி திருமால் | அவுணர்: அரக்கம், நரகேசரி: நரசிம்மம் (கேசரி: சிம்மம்), முராரி: முரன் என்னும் அரக்கனை மாய்த்தவன். |
நாரணன் கேசவன் சீதரன் தேவகீநந்தனன் முகுந்தன் மருகன் | கேசவன்: கேசி என்ற அசுரனை வதைத்தவன்; சீதரன்: ஸ்ரீயை (திருமகளை) மார்பில் தரித்வன், நந்தனன்: குமாரன் |
முககோடி நதிகரன் குருகு ஓடி அநவரதம் முகில் உலவு நீலகிரி வாழ் | முககோடி நதிகரன்: கங்கை, கங்கையில் (தவழ்ந்ததான) ஜோதி, குருகு: வெண்ணிறம், அநவரதம்: எப்போதும், நீலகிரி: திருத்தணிகை |
முருகன் உமை குமரன் அறுமுகன் நடவு விகட தட மூரிக் கலாப மயிலே. | நடவு: நடத்தும், செலுத்தும், விகட தட: அழகும் பெருமையும், மூரி: வலிய, வலிமை வாய்ந்த |

......... பதவுரை .........

யுக ... (சத்ய யுகம், கிருத யுகம், துவாபர யுகம், கலி யுகம் எனப்படும் நான்கு) யுகங்கள்

கோடி முடிவில் ... முடிவடைகின்ற கடைக்கோடியான காலத்திலே,

மண்டிய ... கடுமையாக வீசும்,

சண்ட மாருதம் ... சூறாவளிக் காற்று,

உதித்ததென்று ... (இப்போதே) எழுந்துவிட்டதோ என்று,

அயன் அஞ்சவே ... பிரமன் பயம் கொள்ளவும்,

ஒரு கோடி அண்டர் அண்டங்களும் ... கோடிக்கணக்கான தேவலோகங்களும்,

பாதாள லோகமும் ... கீழ் உலகங்களும்,

பொன் குவடு உறும் ... பொன் மயமான சிகரங்களை உடைய,

வெகு கோடி மலைகளும் ... மிகப்பல கோடிக் கணக்கான மலைகளும்,

அடியினில் ... மயில் அடியெடுத்து வைக்கும் போது,

தகர்ந்து ... தூளாகி,

இரு விசும்பில் பறக்க ... நீண்ட வானத்திலே (தூளாகப்) பறக்கவும்,

விரி நீர் வேலைச் சுவற ... பரந்த நீர்ப் பரப்பை உடைய கடல் வற்றிப் போகவும்,

சுரர் நடுக்கங் கொள ... தேவர்கள் அச்சமடையவும்,

சிறகை வீசிப் பறக்கும் மயிலாம் ... தன்னுடைய தோகைகளை வீசிப் பறக்கும் மயில் (இப்படிப்பட்டது யாருடைய மயில் என்று கேட்டால்)

நககோடி கொண்டு ... கோடானுகோடி நகங்களைத் தன் (எண்ணற்ற கரங்களில்) கொண்டு,

அவுணர் நெஞ்சம் பிளந்த ... அரக்கர்களின் மார்பைப் பிளந்த,

நரகேசரி ... நரசிம்ம மூர்த்தியும்,

முராரி ... முரன் எனற அசுரனைக் கொன்றவனும்,

திருமால் ... மாலோனும்,

நாரணன் ...நாராயணனும்,

கேசவன் ... கேசி என்ற அசுரனைக் கொன்றவனும்,

சீதரன் ... மஹாலட்சுமியை தனது திரு மார்பில் தரித்தவனும்,

தேவகீ நந்தனன் ... தேவகியின் திருக் குமாரனும்,

முகுந்தன் ... முக்தியையும் உலக நலங்களையும் வழங்குபவனும், (மு: முக்தி, கு: உலக நலன்—இவற்றை வழங்குபவர் என்பது வாரியார் சுவாமிகளின் விளக்கம்)—ஆன மஹாவிஷ்ணுவின்

மருகன் ... மருமகனும்,

முககோடி நதிகரன் ... ஆயிரம் முகங்களை உடைய கங்கையினால் சுமக்கப்பட்ட ஜோதி வடிவினன், (சிவனுடைய நெற்றிவிழி சிந்திய பொறிகளை அக்கினி சுமந்து சென்று கங்கையில் விட, கங்கை சரவணப் பொய்கையில் விட அங்கே தோன்றிய ஜோதி ஸ்வரூபன்)

குருகு ஓடி ... வெள்ளை நிறமாக பரவிச் செல்லும்,

அநவரதம் முகிலுலாவு ... மேகங்கள் எப்பொழுதும் தவழ்கின்ற,

நீலகிரி வாழ் ... திருத்தணி மலையில் வீற்றிருக்கும்,

முருகன் உமை குமரன் அறுமுகன் ... முருக மூர்த்தி, பார்வதிபாலன், ஆறுமுகக் கடவுள்,

நடவு ... செலுத்துகின்ற,

விகட ... அழகும்,

தட ... பெருமையும்,

மூரிக் கலாப மயிலே ... மிக்க வலிமையும் கொண்ட தோகைகளை உடைய மயிலே அது.

நரசிம்மமாகவும் மற்ற வடிவங்களிலும் அவதரித்து அசுரர்களை அழித்த திருமால் மருகனான; கங்கை நதி சுமந்த ஜோதியான, திருத்தணியில் வீற்றிருப்பவனான முருகனுடைய மயில் கடல் வற்றும்படியாகவும், மலைகள் சிதறி வானில் பறக்கும்படியாகவும் சிறகை வீசிப் பறக்கிறது.

காப்புச் செய்யுளான சந்தன பாளித என்ற பாடலைத் தவிர்த்து மயில் விருத்தத்தின் மற்ற பாடல்களிலெல்லாம்.திருத்தணிகை மலையைப் பற்றிய குறிப்பு தொடர்ந்து வருவதைக் காணலாம்.