முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 73

மிகுந்த கீர்த்தியுடையதும், அலங்கார, புளகாங்கிதம் கொண்டதும், அமுதக் கலசங்களைப் போன்ற தனங்களை உடையவள்,

Updated On : 28 நவம்பர், 2015 at 11:05 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:09 PM

பதச் சேதம்

சொற் பொருள்

தீரப் பயோததி திக்கும் ஆகாயமும்  செகதலமும் நின்று சுழலத்

தீர: நன்றாக, முழுமையாக.  பயோததி: பாற்கடல்; பயோததி தீர: பாற்கடல் முழுவதும்
திகழ்கின்ற முடி மவுலி சிதறி விழ வெம் சிகைத் தீக்கொப்புளிக்க வெருளும் பாரப் பணாமுடி அநந்தன் முதல்

தலையில் விளங்குவதாகிய மகுடம், வெம்சிகை: கொடிய உச்சியிலுள்ள படங்கள், வெருளும்: அஞ்சும்; பார: கனத்த; பணாமுடி: (நாக) மாணிக்கத்தைக் கொண்ட தலை; அநந்தன்: அந்தமில்லாதவன் அநந்தன்—ஆதிசேடன்.
அரவெலாம் பதைபதைத்தே நடுங்கப்

படர் சக்ரவாளகிரி துகள் பட வையாளி வரு பச்சை ப்ரவாள மயிலாம்

சக்ரவாளகிரி: அண்டத்தைச் சுற்றி வளைத்திருக்கும வட்டமான மலை; வையாளி: ஒய்யாரமாக இடும் நடை, குதிரையின் நடை; ப்ரவாளம்: பவளம்
ஆர ப்ரதாப புளகித மதன பாடீர அமிர்த கலசக் கொங்கையாள்

ஆர: மிகவும்; ப்ராதபம்: புகழ், கீர்த்தி, புளகிதம்:புளாகாங்கிதம், பாடீரம்: சந்தனம்,
ஆடு மயில் நிகர் வல்லி அபிராம வல்லி பரமாநந்த வல்லி சிறுவன்

கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார குரு தரு திருத்தணிகைவேள்

த்ரியம்பக: முக்கண் உடைய, ஜடாதர: ஜடாமுடியைக் கொண்ட, குருதரு: குருவான சிவன் பெற்ற,
கொடிய நிசிசரர் உதரம் எரி புகுத விபுதர் பதி குடி புகுத நடவு மயிலே.

நிசிசரர்: இரவில் உலவுபவர்—அரக்கர், உதரம்: வயிறு; விபுதர் பதி: தேவருலகம்; நடவு: நடத்திய

தீர ... மிகவும் நன்றாக—முழுமையாக

பயோததி ... பய (payas) பால், உததி: கடல், பாற்கடல் முதலான எல்லாக் கடல்களும்,

திக்கும் ... எட்டுத் திசைகளும்,

ஆகாயமும் ... வானமும்,

செக தலமும் ... பூவுலகும்,

நின்று சுழல ... இடைவிடாமல் சுழலும்படியும்,

திகழ்கின்ற ... விளங்குகின்ற,

முடி மவுலி ... ஆயிரம் (தலைகளிலுமுள்ள மாணிக்ததை ஏந்திய படங்களாகிய) பணாமுடிகளும் கீழே விழுந்து சிதறவும்,

வெம் சிகை தீக் கொப்புளிக்க ... கொடிய தலையின் உச்சியிலிருந்து (வாயிலிருந்து) நெருப்பை உமிழவும்,

வெருளும் ... பயத்தை அடைந்த,

பாரப் பணாமுடி ... கனத்த படக் கூட்டங்களை உடைய,

அநந்தன் முதல் அரவெலாம் ... ஆதிசேடன் முதலான பாம்புக்
கூட்டங்கள்,

பதை பதைத்து நடுங்க ... விக்கித்துப் போய், அச்சமுற்று நடுங்கவும்,

படர் சக்ரவாளகிரி ... எங்கும் பரந்துள்ள (அண்டத்தைச் சுற்றியுள்ள சுவரைப் போன்ற) சக்ரவாளகிரி (என்ற மலை),

துகள் பட ... தூள் தூளாகப் போகவும்,

வையாளி வரு ... ஒய்யார நடையிட்டு வருகின்ற,

பச்சைப் பிரவாள மயிலாம் ... பச்சையும் பவளமும் கலந்த நிறத்தையுடைய தோகையைக் கொண்ட மயிலாகும்

ஆர ப்ராதப... மிக்க கீர்த்தி உடையதாய்,

புளகித ... புளகாங்கிதம் கொண்டதாய்

மதன ... பெருமிதம் மிகுந்ததாய்,

பாடீர ... சந்தனப் கலவைகளைப் பூசியதாய் (விளங்கும்),

அமிர்த கலச கொங்கையாள் ... அமிர்தம் நிறைந்த கலசங்களைப் போன்ற மார்பகங்களை உடையவளும்,

ஆடு மயில் நிகர் வல்லி ... தோகையை விரித்து ஆடும் மயிலைப்
போன்றவளும், (வல்லி: கொடி)

அபிராம வல்லி ... பேரழகு உடையவளும், (abhi-rāma. That which is beautiful, lovely, pleasing, delightful—தமிழ்ப் பேரகராதி)

பரமானந்த வல்லி சிறுவன்... பேரானந்தத்தில் நிலைகொண்டிருப்பவளுமான உமையம்மையின் மைந்தன்,

கோர த்ரிசூல ... பயங்கரமான திரிசூலத்தை ஏந்தியவரும்,

த்ரியம்பக ... முக்கண்ணரும்

ஜடாதார ... சடாமுடி தாங்கியவனும்,

குரு ... லோக குருவுமான சிவபெருமான்,

தரு ... தந்தருளியவனும்,

திருத்தணிகை வேள் ... திருத்தணிகையில் வீற்றிருப்பவனுமான முருகவேள்,

கொடிய நிசிசரர் உதிரம் எரி புகுத ... (எப்போதும்) கொடுமைகளையே புரிந்து வந்தவர்களான அசுரர்களுடைய வயிற்றிலே தீப்பாயவும்,

விபுதர் பதி குடி புகுத ... (விபுதர்: தேவர்) தேவர்கள் தங்கள் பதியான தேவலோகம் (அசுரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் மீண்டும்) குடியேறவும்,

நடவு மயிலே ... (இவையெல்லாம் நடைபெறுமாறு) செலுத்திய மயிலல்லவா அது.

பாற்கடலும் இதர சமுத்திரங்களும் எட்டுத் திக்குகளும் விண்ணுலகமும் மண்ணுலகும் இடைவிடாமல் சுழற்சியடையும்படியும்; ஆதிசேடன் முதலான எல்லா நாகங்களும் (அதனதன்) தலைகளிலுள்ள மாணிக்கமானது தெறித்து விழவும்; (ஆதிசேடன் வாயிலிருந்து) நெருப்பைக் கக்குமாறும்; அச்சத்தால் நடுக்கம் எய்துமாறும்; அண்டத்தைச் சுற்றி வளைத்திருக்கிற சக்ரவாளகிரி தூள்தூளாகப் போகும்படியும்—இவ்வளவும் ஏற்படும்படியாக—ஒய்யார நடையிட்டு வருகிற மயில், யாருடையதோ என்று கேட்டால்,)

மிகுந்த கீர்த்தியுடையதும், அலங்கார, புளகாங்கிதம் கொண்டதும், அமுதக் கலசங்களைப் போன்ற தனங்களை உடையவள், ஆடுகின்ற மயிலை நிகர்த்தவள், அழகு நிறைந்த கொடிபோன்றவள்—இப்படிப்பட்ட உமையம்மையின் குமாரன், திரிசூலத்தை ஏந்தும் முக்கண்ணர், ஜடாதரர், உலககுருவானவர்—இப்படிப்பட்ட சிவன் அருளியவன்……

கொடிய அசுரர்களுடைய வயிற்றிலே தீப்பாயும்படியாக (அவர்களை அழித்து, தேவலோகத்தை மீட்டதாலே) தேவர்கள் தங்கள் உலகில் மீண்டும் குடியேறும்படியாக போரில் முருகனுடைய வாகனமாக விளங்கிய மயிலே அது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.