பகுதி - 74
மயில் விருத்தத்தின் எட்டாவது பாடலில்—இதுவரையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே சந்தமென்றாலும்—வேகம் அதிகரிப்பதைப் பார்க்கலாம்.
மயில் விருத்தத்தின் எட்டாவது பாடலில்—இதுவரையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே சந்தமென்றாலும்—வேகம் அதிகரிப்பதைப் பார்க்கலாம். ஒலிப்பதிவிலும் கேட்கலாம். இந்தப் பாடலில் வாசுகி என்றொரு பெயர் வருவதைப் பார்க்கலாம். இது (எண்திசை யானைகளைப் போல) உலகைத் தாங்கியுள்ள எட்டு நாகங்களிலொன்று. கிழக்கு திசையைத் தாங்குவது. பிற நாகங்கள்: அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன். இத்தனை நாகங்களையும் எடுத்து உதறுகின்றது மயில். இறுதியடிகளில் ஒலிக்கும் சந்த ஜாலம் இன்பம் பயப்பது.
செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
சிந்தப் புராரி யமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங் கொப்புளிப்பச்
Advertisement
சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
சங்கார கோர நயனத்
தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
சண்டப்பர சண்டமயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
விருத்தன் திருத்த ணிகைவாழ்
வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட வுணர்த்தி யருளித்
துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
சுவாமிவா கனமா னதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.
</p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235061048&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="justify"> </p>