முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 201

பறைகள் பலவிதமான ஒலிகளை எழுப்ப, திருமால், பிரமன், சிவன், உமையம்மை, முனிவர்கள் அனைவரும் மகிந்து ஆடும்படியும்; அசுரர்கள் வாடிக் கலங்கும்படியும்;

Updated On : 5 ஏப்ரல், 2016 at 12:36 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:27 PM

பதச் சேதம்

சொற் பொருள்

சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி

Advertisement

சுற்ற: சுற்றிய; சலி: சலித்துப் போகும்; விழல்: வீணான; பவிஷு: பெருமை;

துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே

செத்தை: குப்பை; பறிகாயம்: பாரமான உடல்; பொறி: புலன்கள்;

சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி

மதியாத: பொருட்படுத்தாத; கலி காலன்: வலிமையும் செருக்கும் உடைய யமன்; தத்து: ஆபத்து; சூதர் ஐவர்: சூது நிறைந்த ஐம்புலன்கள்; சத்த: ஒலி (காது); பரிசான: ஸ்பரிசமான (மெய்); மண: வாசனை (மூக்கு); ரூப: உருவ (கண்); ரச: சுவை (வாய்)

தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே

சீசி: சீசீ; நாற உடல்: நாறும் உடல்

தித்திமித..............என தாளம்

என்ற தாள லயத்தோடு;

திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே

திக்கு முகில்: எல்லா திக்குகளிலும் உள்ள மேகங்கள்; அரி: திருமால்; அயன்: பிரமன்; பரை: தேவி; வரர்: முனிவரர்; சுரர்: தேவர்கள்; எதிர்களம்: எதிர்க்கும் போர்க்களம்;

எத்திசையும் நாடி யமனார் நிணமோடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர் எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடிவேலா

நிணம்: கொழுப்பு; பெலம்: பலம்; கழுது: பேய்; கொடி: காக்கை; சமர்: போர்;

எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவை தனை சித்தம் அலை காமுக குகா நம சிவாயனொடு ரத்ன கிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே.

எத்தி: ஏமாற்றி; தினை காவல் வல பூவை: தினைப்புனத்தைக் காக்கும் வல்லமையுள்ள நாகணவாய்ப்புள் (மைனா) போன்ற, வள்ளி; சித்தம் அலை: மனத்தை அலைக்கழிக்கின்ற;

சுற்ற கபடோடு பல சூது வினையான பல ... சுற்றிச் சூழ்ந்துள்ள கபடம், பலவிதமான வஞ்சனை நிறைந்த செயல்கள் (யாவற்றையும் மேற்கொண்டு);

கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி ... களவுக் கலையைக் கற்றுத் தேர்ந்தவர்கள்; பழிக்கு இடம் தருபவர்கள்; கொலைகாரர்கள் (இவர்களோடு சேர்ந்திருந்து) சலிப்படைந்து;

சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி ... சுற்றித் திரிந்து, வீணான பெருமையோடு வாழ்க்கையாகிய கடலில் முழுகி, அதனால் நேரும் துன்பங்களை அடைந்து;

துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என ... துக்கத்தைத் தருவதான சம்சாரம் என்னும் கடலில் வீசப்பட்ட வலையில் சிக்கிய மீனைப் போலவும்; குடிக்கின்ற கூழிலே விழுந்த குப்பையைப் போலவும்;

(கடல் மீன் தான் மட்டும் வாடும்; கூழில் விழுந்த குப்பை, தானும் பயனில்லாது, தான் விழுந்த கூழையும் பயனற்றதாகச் செய்யும்)

மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் ... மூண்டெரியும் தீ பட்ட மெழுகைப் போல உருகிக் கரையும் இந்த உடல்;

சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே ... சுத்தம் என்றால் என்னவென்றே அறியாததும், பாரம் நிறைந்ததுமான இந்த உடலிலே அமைந்து இயங்கிக்கொண்டுள்ள ஐந்து புலன்களாலே (புலன்களுக்கு ஆட்பட்டு வாழ்வைக் கழிக்கும்போது),

சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் ... எதையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல்—பலமும் செருக்கும்கொண்ட--யமன் நெருங்கிவருகின்ற சமயத்தில்,

தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் ... (சாவின் வடிவமாக) ஆபத்து வருகிறது என்பதை அறியாமல் ஓடியாடிக் கொட்டமடிக்கும் சூதுநிறைந்தவர்களான ஐம்புலக் கள்வர்களான

சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி ... ஓசை (காது), ஸ்பரிசம் (சருமம்), வாசனை (மூக்கு), உருவம் (கண்), சுவை (வாய்)—இவற்றின் பொய்மை நிறைந்த இன்பங்களில் ஈடுபட்டு விளையாடியும்;

தக்க மடவார் மனையை நாடி அவரோடு ... உரிய பெண்களுடைய வீடுகளுக்குத் தேடிச் சென்று, அவர்களோடு,

பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் ... பலவிதமான காமமயமான ஆடல்களில் கலப்பதான செயலால், இந்த உடல் நாற்றமெடுத்த ஊத்தைச் சரீரமாகிப் போய்,

தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே ... நொந்து இறந்து போவேனோ?  (இதுதான் இந்த உடலைச் சுமந்ததன் பயனோ?) அப்படி நான் இறந்துபடும்முன் உன்னுடைய மாறாத திருவடிகளைத் தந்து அருளவேண்டும்.

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு எனதாளம் ... என்றெல்லாம் எழுகின்ற தாள லயத்தில்,

திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட ... எல்லாத் திசைகளிலும் மேகங்கள் ஆடி இடியிடிக்க, திருமால் ஆட, பிரமன் ஆட,

சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட ... சிவன் அவர்களோடு சேர்ந்து ஆட, உமை ஆட, முனிவர்கள் ஆட,

பல திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட ... பற்பல திசைகளில் இருக்கும் அசுரர்கள் நோக, தேவர்கள் பாட, வேதங்கள் துதிக்க,

எதிர் களம் மீதே எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட ... எதிர்த்து எழுந்த போர்க்களத்தில் எல்லா திசைகளிலும் யமதூதர்கள் (களத்தில் கிடக்கும்) கொழுப்பு வழுக்குவதால் ஆட,

பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட ... பலம் மிகுந்த நரிகள் (உணவு கிடைக்கும் ஆர்வத்தால்) எழுந்து ஆட, பேய்கள் ஆட, காக்கைகள் பறந்தாட,

சமர் எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடிவேலா ... போரிலே எதிர்த்து மோதிவருகின்ற பூதகணங்கள் ஆட—இவர் அனைவரும் ஆடும்படி—ஒளி சுடர்விட்டு ஆடுவதான வடிவேலை விடுபவனே!

எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவை தனை ... (வேலனெனவும், வேடனெனவும், விருத்தனெனவும், வேங்கை மரமெனவும் பலவகையான வடிவங்களைக் காட்டி) ஏமாற்றி, ஒப்பற்ற மான்போன்றவளும், தினைப்புலத்தைக் காப்பதில் வல்லவளுமான நாகணவாய்ப்புள் (மைனா)வைப் போன்ற வள்ளியை,

சித்தம் அலை காமுக குகா ... காதலால் உள்ளம் அலைபாய வைத்த காமுகனே, குகனே!

நம சிவாயனொடு ரத்ன கிரி வாழ் முருகனே ... ரத்தினகிரித் தலத்திலே சிவபெருமானோடு வீற்றிருக்கும் முருகனே!

இளையவா அமரர் பெருமாளே. ... இளையவனே, தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

பறைகள் பலவிதமான ஒலிகளை எழுப்ப, திருமால், பிரமன், சிவன், உமையம்மை, முனிவர்கள் அனைவரும் மகிந்து ஆடும்படியும்; அசுரர்கள் வாடிக் கலங்கும்படியும்; தேவர்கள் பாடும்படியும்; போர்க்களத்து மாமிசத்தை உண்டு நரி, பேய், காக்கைகள் எல்லாமும் துள்ளும்படியும், அசுரர்களை எதிர்த்து எழுந்த போர்க்களத்தில் கூரிய வேலைச் செலுத்தியவனே!  தினைப்புனக் காவலில் வல்லவளான வள்ளியம்மையை வேலன் வேடன் விருத்தன் என்று பலவடிவங்களை எடுத்து ஏமாற்றி, உன்மீது ஏற்பட்ட காதலால் அவருடைய உள்ளத்தை அலைபாயச் செய்த காதலனே!  குகனே!  வாட்போக்கித் தலமான ரத்னகிரியில் சிவபெருமானோடு வீற்றிருக்கும் முருகனே!  இளையவனே!  தேவர்கள் பெருமாளே!

சுற்றிச் சூழ்ந்துள்ள வஞ்சனைகள், சூது இவற்றுடன் திருடர்கள் கொலைகாரர்கள் எல்லோருடனும் சேர்ந்துகொண்டு சிற்றின்பக் கடலில் மூழ்கித் துன்புற்று, சம்சாரமாகிய சாகரத்தில் வீசப்பட்டுள்ள வலையில் சிக்கிய மீனைப் போலவும்; குடிக்கின்ற கூழிலே விழுந்த குப்பையைப் போலவும்; உரிய பெண்களுடைய வீட்டுக்குத் தேடிச் சென்று அவர்களோடு பலவிதமான செயல்களில் ஈடுபட்டு, அனலில் உருகும் மெழுகுபோலக் கரையும் இந்தஉடலை எடுத்ததன் பயன், பயனில்லாமல் சுடுகாட்டில் எரிந்து போவதுதானா?  அப்படியெல்லாம் நேரும் முன்னர் என்றும் மாறாததான உனது திருவடியை எனக்கு அளித்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.