பகுதி - 204
மரணமிலாப் பெருவாழ்வு என்றார் வள்ளலார்; மரணத்தை வெல்லும் வழி என்று பாரதி. ‘பாரதி அறுபத்தா’றில் எழுதினான்; ‘பார்மீது நான்சாகா திருப்பேன் கண்டீர்’ என்றும் சொன்னான்.
இன்றைய சுவாமிமலைத் திருப்புகழ் மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒன்று.
மரணமிலாப் பெருவாழ்வு என்றார் வள்ளலார்; மரணத்தை வெல்லும் வழி என்று பாரதி. ‘பாரதி அறுபத்தா’றில் எழுதினான்; ‘பார்மீது நான்சாகா திருப்பேன் கண்டீர்’ என்றும் சொன்னான்.
மரணபய மிக்குளவம் மக்களர ணாக
மரணபவ மில்லா மகேசன் – சரணமே
சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
சார்வரோ சாவா தவர்
Advertisement
என்றார் ரமண மகரிஷி தன் உள்ளது நாற்பது நூலிலே. மனிதனுடைய ஆதார அச்சங்களில் மிகப் பெரிதான மரணம் அணுகாமல் இருக்கும் வழியைக் கோருகிறது இந்தச் சுவாமிமலைத் திருப்புகழ். உண்மையில் மரணத்தைப் பற்றிய பயத்தை வெல்வதே மரணமில்லா நிலை. இதை குருநாதர் அருணகிரியார் பலபாடல்களில் கோடிகாட்டியிருக்கிறார். மரணத்தை வெல்வது என்பது உண்மையில் மரணத்தை எண்ணியெண்ணிக் கலங்காத நிலையே. இதை உரிய பாடல்களுக்குப் பொருள் சொல்கையில் விரிப்போம். பாடலில் ராமாவதாரத்தில் பெருமான் காக்கையின்மீது அஸ்திரத்தைச் செலுத்திய நிகழ்வு பேசப்படுகிறது. இப்போது பாடல்.
தான தனதன தான தனதன
தான தனதன தனதான
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257586955&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>