முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 206

இன்றைய திருவாவினன்குடித் திருப்புகழ் மிகப்பரவலாக அறியப்பட்டது; முருகனடியார்கள் பலரும் ஓதுவது.  மிக எளிய சந்த அமைப்பைக் கொண்டது.  இதற்கு ‘அபசார நிந்தை’ என்றொரு பாடமும் இருக்கிறது. 

Updated On : 8 ஏப்ரல், 2016 at 1:06 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:29 PM

இன்றைய திருவாவினன்குடித் திருப்புகழ் மிகப்பரவலாக அறியப்பட்டது; முருகனடியார்கள் பலரும் ஓதுவது.  மிக எளிய சந்த அமைப்பைக் கொண்டது.  இதற்கு ‘அபசார நிந்தை’ என்றொரு பாடமும் இருக்கிறது.  ஆனால் பழைய பிரதிகளில் ‘அபகார நிந்தை’ என்ற பாடமே இருப்பதாக குஹத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்கள் குறிப்பிடுகிறார்.  முருகன் தனக்கு ஜெபமாலை தந்த நிகழ்வை குருநாதர் இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார்.  ‘சும்மா இரு சொல்லற’ என்று முருகன் தனக்கு உபதேசித்ததை ‘உபதேச மந்திரப் பொருளாலே’ என்று சொல்கிறார்.

தனதான தந்தனத்         தனதானா

அபகார நிந்தைபட்             டுழலாதே

Advertisement

         அறியாத வஞ்சரைக்             குறியாதே

உபதேச மந்திரப்                 பொருளாலே

         உனைநானி னைந்தருட்       பெறுவேனோ

இபமாமு கன்தனக்              கிளையோனே

         இமவான்ம டந்தையுத்           தமிபாலா

ஜெபமாலை தந்தசற்               குருநாதா

         திருவாவி னன்குடிப்            பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257928523&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.