முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 209

கள்ளத்தனமான வியாபாரத்தில் கைதேர்ந்த துஷ்டர்களும்; ஆணவமே உருவெடுத்ததைப் போன்றவர்களும்......

Updated On : 12 ஏப்ரல், 2016 at 12:50 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:30 PM

பதச் சேதம்

சொற் பொருள்

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார்

Advertisement

விக்ரம: சாமர்த்தியம் கொண்ட; துட்டி: துட்டன், துட்டி.  துஷ்டர்கள்; மத(ர்)த்த: ஆணவம் கொண்ட; துர்ச்சன: துர்ஜன—தீய குணம் கொண்ட; பொட்டி: தந்திரக்காரர்கள்; நாணார்: நாணமற்றவர்கள்;

சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள்

சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே

சிலைக்கு: வில்லுக்கு; நெற்றிகள், மார்பிகள், உதட்டிகள், உருக்கிகள்: நெற்றியை உடையவர்கள், மார்பை உடையவர்கள், உதட்டை உடையவர்கள், உருகச் செய்பவர்கள்;

வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால்

வெருட்டி: அஞ்சச் செய்து; பப்பர(ர்): கூத்தாடிகள்; மட்டைகள்: வீணர்கள்; ஓலை: காதில் அணியும் ஓலை; நீறால்: சாம்பலால்

விளக்கியே  குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ

விளக்கி: துலக்கி; புரட்டிகள்: புரட்டு, மாறுபட்ட பேச்சை உடையவர்கள்; மால்: மயக்கம்; மருள்: மயக்கம்;

தரித்த..............என தாளம்

தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம்  இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம்

தடக்கை: பெரிய கை; இடக்கை: இடது கையால் வாசிக்கப்படும் தாளக்கருவி; நடித்து: நடனமாடி; ஒளிதரித்த: ஒளிகொண்ட; கூளி: பேய்;

அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ந மா முடியைக் கொ(ண்)டு உக கழல் அட கையாடி நிணத்தையே எடுத்து உ(ண்)ண அறவே தான்

அருக்கனார்: சூரியனார்; ப்ரபை: ஒளி; இரத்ந: ரத்தின; உக: சிந்த, சிதற; கழலாடி: கழங்கு ஆடி; நிணம்: கொழுப்பு; அறவே: அடியோடு, முழுக்க;

அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திருக்கை வேல் தனை விட்டு அருளி பொரும் அருள் குகா அருணை பதி உற்று அருள் பெருமாளே.

செறி: சேர்ந்துள்ள; பொரும்: போரிடும்; அருணைப் பதி: திருவண்ணாமலைத் தலம்;

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார் ... கள்ளத்தனமான வியாபாரத்தில் கைதேர்ந்த துஷ்டர்களும்; ஆணவமே உருவெடுத்ததைப் போன்றவர்களும்; தீயதன்மையை உடைய தந்திரக்காரர்களும்; உலகத்தில் வேடமிட்டு வஞ்சிப்பவர்களும்; கெட்டவர்களான பரத்தைகளும்; எதற்கும் வெட்கப்படாதவர்களும்;

(நீலி—விளக்கத்தை நேற்றைய தவணையில் காண்க)

சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் ... வில்லை ஒத்த புருவமும்; பரந்த நெற்றியும்; எடுப்பான மார்புகளும்; எச்சில் ஊறும் உதடுகளும்(கொண்டு) சிரிப்பாலே மனிதர்களை மனமுருகச் செய்பவர்களும்; பார்வையாலேயே அச்சத்தை விளைவித்து, மயக்கி, மேலே வந்து விழுகின்ற கூத்தாடிகளும்; பயனற்ற மக்களும்;

மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் விளக்கியே குழை இட்ட புரட்டிகள் ... பெரிய பாவிகளும்; வட்டமான முகத்தை அலங்காரங்களால் மினுக்கச் செய்பவர்களும்; பித்தளையால் ஆன காதோலையை, சாம்பலைப் போட்டுத் தேய்த்துப் பளபளக்கச் செய்து (பொன்னைப் போலத் தோற்றமளிக்க வைத்து), காதிலே அணிந்திருக்கும் புரட்டுக்காரிகளும்; (இப்படிப்பட்டவர்களான பெண்களின்மேல்),

தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ ... மனம் மயங்கி நின்று சித்தம் கலங்குவதை ஒழித்து, நான் மனம் ஒன்றி உன்னுடைய இரண்டு பாதங்களிலும் பணிவேனோ?

தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் தடக் கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க ... தரித்த தோகண… திக்குகு என்றெல்லாம் ஒலியெழும்படிப் பெரிய கரங்களால் தாளமிட்டுக்கொண்டு, பொருந்தியதான மத்தளம், இடக்கை போன்ற கருவிகள் ஒன்றாக ஒலியெழுப்ப,

நடித்து ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ந மா முடியைக் கொ(ண்)டு உகக் கழல் அடக் கையாடி நிணத்தை எடுத்து உ(ண்)ண ... (அந்தத் தாள ஒலிக்குக்குத் தக) நடனமாடும் ஒளிகொண்ட பேய்களும்; தத்திமி தித்தென்று (குதிக்கும்) பூதக்கூட்டங்களும்; சூரியனுடைய ஒளியைப் போலச் சுடர்விடும் ரத்தினங்களால் ஆன கிரீடங்களிலிருந்து (அந்த ரத்தினங்கள்) சிந்தி, (அவற்றை) கழங்கு—கழற்சிக்காய்—போல எறிந்து விளையாடியும்; மாமிசத்தையும் கொழுப்பையும் எடுத்து உண்ணும்படியும்;

அறவே தான் அரக்கர் சேனைகள் பட்டு விழச் செறி திருக்கை வேல் தனை விட்டு அருளிப் பொரும் அருள் குகா அருணைப் பதி உற்று அருள் பெருமாளே. ... அரக்கர்களுடைய சேனை அடியோடு அழிந்துபடும்படி, திருக்கையில் விளங்குவதான வேலை எறிந்து போரிட்டருளிய குகனே!  திருவண்ணாமலைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

தரித்த தோகண தக்குகு திக்குகு என்றெல்லாம் ஒலிக்கும் பறைகளுடைய தாளங்களுக்கு ஏற்ப நடனமாடும் பூதகணங்கள், போர்க்களத்தில் அரக்கர்களுடைய கிரீடங்களிலிருந்து சிதறிக் கிடக்கும் ரத்தினக் கற்களைக் கழங்காடுவதைப் போல எறிந்து விளையாடியும்; களத்தில் கிடக்கும் மாமிசத்தையும் கொழுப்பையும் அள்ளி உண்ணும்படியும் அரக்க சேனைகளைக் திருக்கையில் ஏந்தியுள்ள வேலாயுதத்தைச் செலுத்தி அழித்தவனே!  திருவண்ணாமலையிலே வீற்றிருக்கும் பெருமாளே!

திருட்டு வியாபாரத்திலே திறமை மிக்கவர்களும்; ஆணவமே வடிவமாக உள்ளவர்களும்; தீயகுணத்தைக் கொண்ட தந்திரசாலிகளும்; இவ்வுலகில் வேடமிட்டு வஞ்சிக்கும் நீலியைப் போன்றவர்களும்; வெட்கமற்றவர்களும்; வில்லைப் போன்ற புருவமும்; பரந்த நெற்றியும்; எடுப்பான மார்பும்; எச்சில் வடியும் உதடுமாக, பார்வையாலேயே ஆளை மயக்கி உள்ளத்தை அஞ்சவைத்து மேலே வந்துவிழுகின்ற கூத்தாடிகள்; பயனற்ற மக்கள்; பித்தளையால் ஆன காதோலையைச் சாம்பலால் தேய்த்துப் பளபளபாக்கிப் பொன் என்பதைப்போன்று தோன்றச் செய்து காதிலே ஆபரணமாக அணிபவர்கள்; மாறிமாறிப் பேசும் புரட்டர்கள்—என்று இத்தகையோர்கள்மீது மையல் கொண்டுநிற்கும் மயக்கத்தைக் கைவிட்டு; மனம் ஒருமைப்பட்டு, உன்னுடைய இரண்டு திருவடிகளிலும் என்றும் பணியும் பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.