பகுதி - 144
முருகனுக்கு செட்டி என்ற பெயர் ஏற்பட்ட புராணத்தைக் கூறும் பாடல் இது. விராலி மலைத் திருப்புகழ்.
முருகனுக்கு செட்டி என்ற பெயர் ஏற்பட்ட புராணத்தைக் கூறும் பாடல் இது. விராலி மலைத் திருப்புகழ். இதற்கு முன்னால் சேவல் விருத்தத்தின் நான்காம் பாடலிலும் முருகனுக்குச் செட்டி என்ற பெயர் ஏற்பட்டதன் காரணத்தைப் பார்த்தோம்.
ஒருமுறை, சங்கப் புலவர்கள் 49 பேர் இறையனார் அகப்பொருளுக்கு எழுதிய உரையில் எந்த உரை சிறந்தது என்ற வாதம் வலுக்க, அந்த ஊரில் தனபதி செட்டியார் என்பவருடைய ஊமைப் பிள்ளையாக ருத்ரஜன்மன் என்ற பெயரில் அவதரித்திருந்த முருகன் நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோர் உரையே சிறந்தவை என்று தீர்ப்பளித்த செய்தி இந்தப் பாடலில் இடம் பெறுகிறது.
எப்போதும் இடது பாதம் தூக்கியாடும் இறைவனை, பாண்டியன் ராஜசேகரன், கால் வலிக்குமோ என்று காலை மாற்றி ஆடும்படிக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நடராஜப் பெருமாள் கால் மாற்றி ஆடிய செய்தியும் இதில் சொல்லப்படுகிறது. பாடலில் சீரான இடைவெளியில் நெட்டெழுத்துகள் இடம்பெறுவதைப் பார்க்கலாம்.
Advertisement
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன - தனதான
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக - மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள - இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட - முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது - பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு - ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர - குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு - மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை - பெருமாளே.
</p><p align="JUSTIFY"></p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/245552650&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>