பகுதி - 152
இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. எந்தக் குறிப்பிட்ட தலத்துக்குமானது இல்லை. தாளகதியில் அநேகமாக எல்லா எழுத்துகளும் நெடிலாக இருக்கும் சந்த ஓட்டத்தைக் கொண்டது.
இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. எந்தக் குறிப்பிட்ட தலத்துக்குமானது இல்லை. தாளகதியில் அநேகமாக எல்லா எழுத்துகளும் நெடிலாக இருக்கும் சந்த ஓட்டத்தைக் கொண்டது.
பாடலை இப்போது பார்ப்போம். பொருளை நாளைக்குக் காண்போம்.
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
Advertisement
சாவா மூவா வேளே போல்வாய்
தாளா வேனுக் ...... கருள்கூருந்
தாதா வேஞா தாவே கோவே
சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே
போல்வா யீதற் ...... கெனையாள்கொண்
டேயா பாடா வாழ்வோர் பாலே
யான்வீ ணேகத் ...... திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார்
பாரா வாரத் ...... துரகேசப்
பாய்மீ தேசாய் வார்கா ணாதே
பாதா ளாழத் ...... துறுபாதச்
சேவா மாவூர் கோமான் வாழ்வே
சீமா னேசெச் ...... சையமார்பா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/246508808&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong> </strong></p>