முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 163

புகழ்பெற்ற வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த ஊரும் இதுவே; ஆகவே இது குன்னக்குடி என்றும் அறியப்படுகிறது

Updated On : 25 பிப்ரவரி, 2016 at 3:50 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:08 PM

பதச் சேதம்

சொற் பொருள்

நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு(ம்) நாள் தோறும் மதி காயும் வெயிலாலும் நாம்: நாம, நாமம் என்றால் அச்சத்தை விளைக்கின்ற என்று பொருள்; மாரன்: மன்மதன்; அயில்: கூர்மையான பாணங்கள்;
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலை ஊடே நார் மாதர்: அன்புகொண்ட பெண்கள்; வேய்: மூங்கில், புல்லாங்குழல்; நாடு: நாடுகின்ற, விரும்புகின்ற;
ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயர் ஊடே ஏமாறி: ஏமாந்து; மாலாகி: மோகமுற்று; விருதா: வீணாக; வாரும் விழி: நீண்ட விழி;
ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில் ஏகி உ(ன்)னுடன் மேவ அருள்தாராய் ஏகாமல்: செல்லாமல்; பதம்: நிலை; உன்னோடு மேவ: உன்னோடு பொருந்தியிருக்க;
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில் மோகமுடன்: ஆசையுடன்; ஊறு பால்: கறந்த பால்;
தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே தாமோதரன்: தாம உதரன் —கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்; முராரி: முரன் என்ற அசுரனை வதைத்தவன்;
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புய வீரா மாமாது: சிறந்த பெண்ணான இலக்குமி; வனமாது: வள்ளி; கார் மேவும்: மேகம் சூழ்ந்திருக்கும்; சிலை: மலை; புய வீரா: புயத்தை —தோளை — உடைய வீரனே
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூர கிரி மேவும் பெருமாளே. வான்நாடு: தேவலோகம், தேவர்கள்; தேனாறு புடைசூழும்: தேனாறு என்ற ஆறு சுற்றிலும் ஓடும்; மாயூரகிரி: குன்றக்குடி;

நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு(ம்)… அச்சத்தை விளைவிப்பதுபோலக் கூவுகின்ற குயிலாலும்; சிறந்த மன்மதனுடைய பாணங்களாலும்;

நாள் தோறும் மதி காயும் வெயிலாலும்… ஒவ்வொரு நாளும் எரிக்கின்ற வெயிலைப் போல சுடுகின்ற நிலவாலும்;

நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும்… அன்புகொண்ட பெண்கள் (என் நிலைமையைப் பார்த்துப் பேசும்) கேலிப் பேச்சாலும்; புல்லாங்குழலின் இன்னிசையாலும்;

நாடு ஆசை தரு மோக வலை ஊடே… நாடச் செய்யும் (விருப்பத்தைத் தூண்டும்) ஆசையால் ஏற்படும் மோக வலைக்கு ஆட்பட்டு,

ஏமாறி முழு நாளும் மாலாகி… ஏமாந்துபோய், நாள் முழுவதும் மோகத்தில் ஆழ்ந்து;

விருதாவிலே வாரும் விழி மாதர் துயர் ஊடே ஏகாமல் … வீணாக, நீண்டவிழிகளைக் கொண்ட பெண்களால் உண்டாகும் துயரத்துக்குள்ளே செல்லாமல்;

அழியாத மேலான பதம் மீதில் ஏகி… அழிவற்றதும் மேலானதுமான நிலையின் மீதில் (கவனத்தைச் செலுத்தி, அந்த வழியிலே) நடந்து

உ(ன்)னுடன் மேவ அருள்தாராய்… உன்னோடு பொருந்தியிருப்பதற்கான அருளைத் தரவேண்டும்.

தாம் மோகமுடன் ஊறு பால் தேடி… (கண்ணனாகிய) தான், ஆசையோடு, கறந்த பாலைத் தேடிக்கொண்டு,

உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில்… உரல்மீதில் ஏறி விளையாடுகின்ற சமயத்தில்,

தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே… தாய் யசோதைக்குத் தெரியாமல் (வெண்ணெய், பாலைத்) திருடும் தாம உதரனான (கயிற்றால் கட்டப்பட் வயிற்றை உடையவனான); முரன் என்ற அசுரனை வதைத்த திருமாலுடைய மருமகனே!

மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புய வீரா… சிறந்த பெண்ணாகிய இலக்குமியைப் போன்ற வனமாதும்; மேகம் சூழ்ந்த மலைகளில் வாழ்பவளுமான வள்ளியின் மேல் மோகம் கொண்டு விளையாடுகின்ற பன்னிருதோள் வீரனே!

வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூர கிரி மேவும் பெருமாளே… தேவலோகத்தவரும் புகழ்வதான; தேனாறு என்னும் ஆற்றினால் சூழப்பட்ட மயூரகிரி எனப்படும் குன்றக்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.

(புகழ்பெற்ற வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த ஊரும் இதுவே; ஆகவே இது குன்னக்குடி என்றும் அறியப்படுகிறது)

சுருக்க உரை

ஆசையோடு கறந்த பாலைத் தேடியபடி, தாய் யசோதைக்குத் தெரியாமல் உரல்மீது ஏறி விளையாடுகின்ற தாமோதரனும்; முரன் என்ற அசுரனை வதைத்தவனுமான திருமாலுடைய மருமகனே!  மேகங்கள் சூழ்ந்த வள்ளிமலைக் காட்டில் வளர்ந்த வள்ளியின்மேல் மோகம்கொண்ட பன்னிரு தோளனே!  தேவலோகத்தாரும் புகழ்வதானதும்; தேனாறு பாய்வதுமான குன்றக்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!

(என் மோகத்தின் காரணமாக) என் உள்ளத்தில் நடுக்கம் ஏற்படுமாறு கூவுகின்ற குயிலாலும்; மன்மதனுடைய கூர்மையான அம்புளாலும்; அன்புபாராட்டும் பெண்கள் (என் நிலைமையைப் பார்த்துப்) பேசும் கேலிப் பேச்சுகளாலும்; புல்லாங்குழலின் இன்னிசை உண்டாக்கும் மோக லாகிரியாலும் ஏற்படும் மோக வலைக்குள் நான் அகப்பட்டு ஏமாந்துவிடாமல்; உன்னோடு சேர்ந்து கலந்திருக்கும் அழிவற்றதும் மேலானதுமான நிலையை நான் அடையுமாறு அருள்புரிவாயாக.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.