முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 164

வட ஆற்காடு, வாலாஜாவுக்கு அருகில் உள்ள தலம் வள்ளிமலை.  ரமண மகரிஷியின் திருவுள்ளப்படியும், சேஷாத்திரி சுவாமிகளுடைய, ‘இனி உன் வாழ்வு திருப்புகழோடுதான்’

Updated On : 25 பிப்ரவரி, 2016 at 4:02 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:08 PM

வட ஆற்காடு, வாலாஜாவுக்கு அருகில் உள்ள தலம் வள்ளிமலை.  ரமண மகரிஷியின் திருவுள்ளப்படியும், சேஷாத்திரி சுவாமிகளுடைய, ‘இனி உன் வாழ்வு திருப்புகழோடுதான்’ என்ற சொற்படியும் இத்தலத்தை வந்தடைந்த வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளுடைய ஆசிரமம் இங்குள்ளது.  சுவாமிகளுக்கு இத்தலத்தில் வள்ளியம்மை, ‘பொங்கி’ என்ற பெயருடைய சிறுமியாகக் காட்சி கொடுத்திருக்கிறாள்.  இத்தலத்தில் வள்ளியம்மைக்குப் பொங்கியம்மன் என்ற பெயரில் மூர்த்தம் உண்டு.  சுவாமிகளுக்கு, ‘நானுன்னை மறவேன், நீயென்னை மறவாதே’ என்று குறிப்பு எழுதிவைத்துவிட்டு பொங்கியம்மன் மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

படங்கள்: நன்றி – http://murugan.org/tamil/vallimalai.htm

வாரியார் சுவாமிகள் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகளைச் செய்திருக்கிறார்.  மிக அழகிய தலம்.  இந்தத் தலத்துக்கான திருப்புகழை இப்போது பார்க்கிறோம்.

Advertisement

ஒவ்வோரடியிலும் முதற்பாதி முழுவதும் இணைக்குறில் நிரையசை; ஆறாவது, ஏழாவது சீர்களில் மட்டும் நெடிலோசை என்ற ஓசை ஒழுங்கு பயிலும் பாடல் இது.

தனதன தனதன தனதன தனதன

தய்யத் தனாத்த - தனதான

ககனமு மநிலமு மணல்புனல் நிலமமை

கள்ளப் புலாற்கி – ருமிவீடு

கனலெழ மொழிதரு சினமென மதமிகு

கள்வைத் ததோற்பை - சுமவாதே

யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்

உள்ளக்க ணோக்கு - மறிவூறி

ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி

லுள்ளத் தைநோக்க - அருள்வாயே

ம்ருகமத பரிமள விகசித நளினநள்

வெள்ளைப் பிராட்டி - இறைகாணா

விடதர குடிலச டிலமிசை வெகுமுக

வெள்ளத் தையேற்ற - பதிவாழ்வே

வகுளமு முகுளித வழைகளு மலிபுன

வள்ளிக் குலாத்தி - கிரிவாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத

வள்ளிக் குவாய்த்த - பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.