முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 165

இந்தப் பாடல் அற்புதமான அமைப்பைக் கொண்டது என்பதை தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை சுட்டிக் காட்டுகிறார்.  பாடலில் ஒவ்வோரடியிலும் உள்ள இரண்டாவது அரையடிகளை மட்டும் தனியே தொகுத்தால், ஒரு முழுமையான பாடலாக வரும்.  இப்படி -

Updated On : 27 பிப்ரவரி, 2016 at 5:35 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:09 PM

இந்தப் பாடல் அற்புதமான அமைப்பைக் கொண்டது என்பதை தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை சுட்டிக் காட்டுகிறார்.  பாடலில் ஒவ்வோரடியிலும் உள்ள இரண்டாவது அரையடிகளை மட்டும் தனியே தொகுத்தால், ஒரு முழுமையான பாடலாக வரும்.  இப்படி -

கள்ளப் புலால்கி ருமிவீடு, கள்வைத்த தோற்பை சுமவாதே
உள்ளக்க ணோக்கும் அறிவூறி, உள்ளத்தை நோக்க அருள்வாயே
வெள்ளைப் பிராட்டி இறைகாணா, வெள்ளத்தை ஏற்ற பதிவாழ்வே
வள்ளிக் குலாத்தி கிரிவாழும் வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

(பொருள்): கள்ளத்தனத்துக்கு இடமானதும், புலாலும் கிருமியும் நிறைந்ததுமான வீடாகிய உடல் என்ற இந்தத் தோல் பையைச் சுமக்காமல், உள்ளத்திலே (உள்ளக்கண்—உள்ளத்தின்கண்) அறிவு ஊறி (ஞானம் பெருகி), (என்றென்றும்) உள்ளதாகிய பொருளைக் காணும்படி அருளவேண்டும்.  வெள்ளைப் பிராட்டியான கலைமகளுடைய தலைவனான பிரமன் காணமுடியாத (முடியில்) கங்கையை ஏற்ற தலைவனுடைய (பதியுடைய) செல்வமே! குலபர்வதமாகிய வள்ளிமலையில் இருப்பவளான வள்ளி, மணாளனாக அடைந்த பெருமாளே!

Advertisement

இனி முழுப்பாடலின் பொருளைப் பார்ப்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு

ககனம்: ஆகாயம்; அநிலம்: காற்று; அனல்: தீ; புனல்: நீர்; நிலம்: பூமி; கள்ள: கள்ளத்தனத்துக்கு இடமான; புலால்: மாமிசம்; கிருமி வீடு: கிருமிகள் குடியிருக்கும் வீடான உடல்;

கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே

கனல்எழ: தீ எழுவதுபோல; மொழிதரு: பேச்சுகளைச் சிதறும்; சினமென: கோபம் என்கிற; மதம்மிகு: ஆணவம் நிறைந்த; கள்வைத்த: கள்ளத்தனத்தைப் பொதிந்து வைத்துள்ள;

யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ளக் கண் நோக்கும் அறிவு ஊறி

யுக இறுதிகளிலும்: யுகாந்தம், யுகமுடிவுக்காலத்திலும்; இறுதியில்: முடிவற்றதான; உள்ளக் கண்: உள்ளத்தின் கண்ணே, உள்ளத்தில்; அறிவூறி: ஞானம் பெருகி;

ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே

ஒளிதிகழ்: ஒளியுள்ளது; அரு: உருவற்றது; உரு: உருவுள்ளது; மறைஇறுதியில்: வேதங்களுக்கு முடிவானது; அத்தை நோக்க: அதை நோக்க;

ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா

ம்ருகமதம்: கஸ்தூரி; பரிமளம்: நறுமணம்; விகசித: மலர்ந்த; நளின: (வெள்ளைத்) தாமரையில்; நள்: நடுவில்; வெள்ளைப் பிராட்டி: கலைமகள்; வெள்ளைப் பிராட்டி இறை: பிரமன்;

விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே

விடதர: விடத்தை கண்டத்தில் தரித்த (ஸ்ரீயைத் தரித்தவன் ஸ்ரீதரன்; விடத்தைத் தரித்தவன் விடதரன்; சசியைத் (சந்திரனைத்) தரித்தவன் சசிதரன்); வெகுமுக: பல கிளை நதிகளையுடைய; சடிலம்: சடாமுடி; வெள்ளத்தை: கங்கையை; பதி: தலைவன்; வாழ்வு: செல்வன்;

வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலத்திகிரி வாழும்

வகுளம்: மகிழம்; முகுளித: அரும்பு விடும்; வழை: சுரபுன்னை; மலி: நிறைந்த; புனம்: வயல்; குலாத்திகிரி: குல+திகிரி சிறப்புடைய மலை;

வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.

வனசரர்: காட்டில் திரிபவர்—வேடர்; மரபினில்: குலத்தில்; ஒரு: ஒப்பற்ற; மரகத: பச்சை நிறத்தவளான;

ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு… ஆகாயம், காற்று, தீ, நீர், பூமி என ஐம்பூதங்களால் அமையப்பெற்ற கள்ளத்தனத்துக்கு இடம் கொடுப்பதான; மாமிசத்தாலும் கிருமிகளாலும் ஆன வீடாகிய இந்த உடல் (என்ற);

கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு…  தீ எழுவதுபோல பேச்சுகளைச் சிதறச் செய்யும் கோபம் என்கிற ஆணவம் அதிகரித்து (அடியேன்)

கள் வைத்த தோல் பை சுமவாதே… கள்ளத்தனத்தால் பொதிந்துள்ள இந்த தோல்பையாகிய உடலைச் சுமந்து திரியாமல்;

யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள்…  யுகங்களின் முடிவில் ஏற்படும் பிரளய காலத்திலும் முடிவற்றதாக விளங்குகின்ற ஒப்பற்ற பொருளை,

உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி… உள்ளத்தினிடத்திலே பார்ப்பதான ஞானம் பெருகி;

ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள…  ஒளிமிக்கது எனவும்; உருவற்றது எனவும்; உருவுள்ளது எனவும் வேதங்களின் முடிவாக விளங்குவது எனவும் விளங்குவதான

அத்தை நோக்க அருள்வாயே… அதை—அப்பொருளை—என் உள்ளத்தினுள்ளே பார்க்க அருள் தரவேண்டும்.

ம்ருகமத பரிமள விகசித நளின நள்…  கஸ்தூரியின் நறுமணத்தோடு கூடிய வெள்ளைத் தாமரையின் நடுவிலே,

வெள்ளை பிராட்டி இறை காணா… வீற்றிருப்பவளான கலைமகளின் தலைவனான பிரமனும் காண முடியாத,

விட தர குடில சடில மிசை…  விஷத்தைத் தரித்த கண்டமும், சடாமுடியிலே,

வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே… பல கிளைநதிகளை உடைய கங்கையைத் தரித்திருப்பவரான தலைவருடைய செல்வமே!

வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலத்திகிரி வாழும்… மகிழமரங்களும், அரும்புவிடும் சுரபுன்னைகளும் நிறைந்துள்ள தினைப்புனங்களைக் கொண்ட குலபர்வதமான வள்ளிமலையில் வாழ்ந்திருக்கும்,

வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத…  வேடர் குலத்தில் உதித்தவளும் பச்சை நிறத்தவளுமான,

வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. வள்ளிப்பிராட்டிக்கு மணாளனாக வாய்த்த பெருமாளே.

சுருக்க உரை

கஸ்தூரியின் நறுமணம் கமழும் வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளின் தலைவனான பிரமனாலும் காணமுடியாத நஞ்சுண்ட கண்டத்தையும்; பல கிளை நதிகளைக் கொண்ட கங்கையைத் தரித்த சடாமுடியையும் கொண்ட பரமசிவனாரது செல்வமே!  மகிழம்பூக்களும், அரும்புவிடும் சுரபுன்னைகளும் நிறைந்த வயல்வெளிகளைக் கொண்ட ஒப்பற்ற மலையான வள்ளிமலையில், வேடர்குல விளக்காக வந்துதித்தவளும், பச்சை நிறத்தவளுமான வள்ளியம்மையின் மணாளனே!

ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் என்று பஞ்சபூதச் சேர்க்கையாலே உருவானதும்; வஞ்சகமும் மாமிசமும் கிருமிகளும் நிறைந்த வீடும்; கோபம் மிக்க சொற்களை உதிர்ப்பதும், ஆணவம் நிறைந்ததுமான உடலென்னும் இந்தத் தோற்பையை நான் இனியும் சுமந்து திரியாமலும்;

ஒளிமிக்கது எனவும்; உருவமற்றது எனவும்; உருவமுள்ளது எனவும்; வேதங்களுக்கு முடிவாக விளங்குவது எனவும் நிற்பதும்; பிரளயகாலத்திலும் முடிவற்றதாய் விளங்குவதுமான ஒப்பற்ற அந்தப் பொருளை என் உள்ளத்தின் உள்ளே காணும்படியாகவும் அருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.