பகுதி - 166
இதுவும் வள்ளிமலைத் திருப்புகழ்ப் பாக்களில் ஒன்று. ‘இனி உன் வாழ்வெல்லாம் திருப்புகழ்தான்’ என்று சேஷாத்திரி ஸ்வாமிகளால் அருளப்பட்டு
இதுவும் வள்ளிமலைத் திருப்புகழ்ப் பாக்களில் ஒன்று. ‘இனி உன் வாழ்வெல்லாம் திருப்புகழ்தான்’ என்று சேஷாத்திரி ஸ்வாமிகளால் அருளப்பட்டு, வள்ளிமலை வந்தடைந்து வாழ்நாள் முழுவதும் திருப்புகழே மூச்சாக வாழ்ந்த வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், சுமார் நாற்பது வயதுவரை எழுதப் படிக்கத் தெரியாதவர். ஒரு ஆலய உற்சவத்தில் நடனமாடிய பெண், ‘வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய’ என்ற திருச்செங்காட்டங்குடி திருப்புகழுக்கு அபிநயம் பிடிக்க, அப்பாடலி வரும்,
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென
அர்த்தநாரி என்ற பூர்வாசிரமப் பெயரோடிருந்த சுவாமிகளுடைய இதயத்தை ஏதோ செய்ய, மனமுருகிய அவர் திருப்புகழைக் கற்றறிவதற்காகவே நாற்பது வயதுக்கு மேல் எழுதப் படிக்கக் கற்று, திருப்புகழை முழுவதுமாக ஓதியுணர்ந்தார். ரமண மஹரிஷிக்கு சேவை செய்துகொண்டிருந்த அர்த்தநாரியை ஒருநாள் ரமணர், ‘நீ கீழே போ’ என்று — சுவாமிகள் இருந்த மலைக் குகையைவிட்டுக் கீழே - போகச் சொல்ல, ஒன்றும் புரியாமல் திகைத்த அர்த்தநாரி, கீழே இறங்கிவர, கீழே சித்தன்போக்கு சிவன் போக்கு என்ற விசித்திரப் போக்கைக் கொண்ட சேஷாத்திரி சுவாமிகள், சேற்றில் கிடக்கும் எருமைகளைக் கட்டிக்கொண்டு கிடந்தார். அர்த்தநாரியைக் கண்டதும் எழுந்து வந்து அணைத்துக் கொண்டு, வேதங்களிலிருந்து ஒரு மஹாவாக்கியத்தைச் சொல்ல, அதற்கிணையான திருப்புகழை அர்த்தநாரி சொன்னார். அப்படிச் சொன்னதும், ‘இனிமேல் உன் வாழ்வைத் திருப்புகழுக்கே காணிக்கையாக்கு’ என்று அவரை வள்ளிமலைக்கு அனுப்பிவைத்தார் சேஷாத்திரி சுவாமிகள். இப்படிப்பட்ட மகானுடைய ஆசிரமம் அமைந்துள்ள தலம் வள்ளிமலை.
Advertisement
இன்றைய பாடல், இலக்கியத்தில் ‘நற்றாய் இரங்கல்’ என்னும் வகையைச் சேர்ந்தது. தலைவன்மேல் கொண்ட மோகத்தால் மகள் படும் துன்பத்தைக் காணப் பொறாத தாய், அவளை மணம்புரிந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்வது. முற்றிலும் குறில் எழுத்துகளும் இடையின மெல்லின ஒற்றுகளுமாக நடக்கும் இந்தப் பாடலில் ஒவ்வோரடியிலும் இறுதிச்சீரில், இறுதி எழுதுக்கு முதலெழுத்து மட்டும் நெடிலாக அமைந்திருப்பதைக் காணலாம்.
தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த - தனதான
அல்லசல டைந்த வில்லடல நங்கன்
அல்லிமல ரம்பு - தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட - அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று - முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு - தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை கண்ட - புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை - யருள்வோனே
வல்லசுர ரஞ்சு நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த - மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த - பெருமாளே.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/249431191&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>