முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 266

திருச்செந்தூர் தலத்துக்கான பாடலிது.  அருணகிரியாருடன் எப்போதும் மோதிக்கொண்டிருந்த சம்பந்தாண்டான், தனக்குப் பலவிதமான பட்டப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பல்லக்கில்

Updated On : 9 ஜூன், 2016 at 10:26 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:57 PM

திருச்செந்தூர் தலத்துக்கான பாடலிது.  அருணகிரியாருடன் எப்போதும் மோதிக்கொண்டிருந்த சம்பந்தாண்டான், தனக்குப் பலவிதமான பட்டப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பல்லக்கில் பவனிவந்த சமயத்தில் அவனுடைய அகந்தை நீங்குமாறு இந்தப் பாடலைப் பாட, பல்லக்கு நொறுங்கியதாகச் சொல்வார்கள்.  திருமுருக கிருபானந்த வாரியார் இயற்றிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் என்ற நூலில் இப்படியொரு குறிப்பு இருக்கிறது.   அப்படியும் சொல்லலாம்.  பொதுவாகவே தன்னுடைய அகந்தை அழியும்படிப் பாடியதாகவும் சொல்லலாம்.  உரையாசிரியர்கள் பின்னதைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள். 

இந்தப் பாடலில் திருமால், பரமசிவனிடமிருந்து சக்ராயுதத்தைப் பெற்ற வரலாறு சொல்லப்படுகிறது.  மைசூரு, நஞ்சங்கூட்டில் உள்ள சிவாலயத்தில் இக்காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

தனதனன தான தான தந்தன 

Advertisement

      தனதனன தான தான தந்தன 

      தனதனன தான தான தந்தன   தந்ததான 

படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள் 

         வியனினுரை பானு வாய்வி யந்துரை 

         பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி         சங்கபாடல் 

      பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை 

         திருவளுவ தேவர் வாய்மை யென்கிற 

         பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல்    சந்தமாலை 

மடல்பரணி கோவை யார்க லம்பக 

         முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் 

         வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி      சண்டவாயு 

      மதுரகவி ராஜ னானென் வெண்குடை 

         விருதுகொடி தாள மேள தண்டிகை 

         வரிசையொ டுலாவு மால கந்தைத        விர்ந்திடாதோ

அடல்பொருத பூச லேவி ளைந்திட 

         எதிர்பொரவொ ணாம லேக சங்கர

         அரஹர சிவாம ஹாதெ வென்றுனி       அன்றுசேவித் 

      தவனிவெகு கால மாய்வ ணங்கியு 

         ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம 

         அதிபெல கடோர மாச லந்த்ர             னொந்துவீழ 

உடல்தடியு மாழி தாவவெ னம்புய 

         மலர்கள் தச நூறு தாளி டும்பக 

         லொருமலரி லாது கோவ ணிந்திடு        செங்கண்மாலுக் 

      குதவிய கேசர் பால இந்திரன் 

         மகளை மண மேவி வீறு செந்திலி 

         லுரியஅடி யேனை யாள வந்தருள்        தம்பிரானே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/268248842&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.