முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 267

வெண்குடை, வெற்றிச் சின்னமான பட்டயங்கள், வெற்றிக்கொடி, தாளம், மேளம் பல்லக்கு முதலான

Updated On : 10 ஜூன், 2016 at 10:55 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:58 PM

பதச் சேதம்

சொற் பொருள்

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள்  வியனில் உரை பானுவாய் வியந்து உரை  பழுதுஇல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல்

Advertisement

படர்புவி: பரந்த பூமி; மீறி: மிதமிஞ்சி; வஞ்சர்கள்: வஞ்சனை உடைய கருமியர்; வியனில்: வியன்—சிறப்பு, வியனில்: சிறப்பாக; பானுவாய்: சூரியனாக; சங்கபாடல்: சங்க இலக்கியங்கள்;

பனுவல் கதை காவ்யமாம் எண் எண் கலை திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை ஓதியே உணர்ந்து பல் சந்த மாலை

எண்எண் கலை: (8x8) அறுபத்துநான்கு கலைகள்; திருவள்ளுவ தேவர் வாய்மை: திருவள்ளுவர் இயற்றிய, வாய்மையே வடிவான; பழமொழியை: பழையதான திருக்குறளை;

மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும் வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி  சண்ட வாயு

கோடிகோள்: கோடிக் கணக்கான (கோள்: கொள்ளும்); சண்டவாயு: சண்டமாருதம்;

மதுரகவி ராஜன் நான் என்(று) வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ

நானென்: நான் என; விருது: பட்டங்கள்; தண்டிகை: பல்லக்கு; மால்: மயக்கம்;

அடல் பொருத பூசலே விளைந்திட எதிர் பொர ஒணாமல் ஏக சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று சேவித்து

அடல்: வலிய; பூசல்: ஆரவாரம்; உன்னி: நினைத்து; (இங்கே சொல்லப்படுவதன் விளக்கத்தை அடிக்குறிப்பில்* காணவும்);

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ

அவனி: அவனியில், உலகில்; உள்ளுருகி: மனமுருகி; பாசகோச(ம்): பாசக்கயிறு (முதலிய ஆயுதங்களின்) தொகுதி; சம்ப்ரம: ஆடம்பர(மான); அதிபெல: மிக்க வலிமையுள்ள; கடோர: கொடுமையுள்; சலந்த்ரன்: சலந்தராசுரன்;

உடல் தடியும் ஆழி தா என அம்புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு

தடியும்: வெட்டும், கிழிக்கும்; ஆழி: சக்கரம், சக்கரப்படை; அம்புய: அம்புஜ, தாமரை; தசநூறு: (10x100) ஆயிரம்; கோ அணிந்திடு செங்கண்: தன்னுடைய சிவந்த கண்ணையே (அந்த மலருக்கு) ஈடாகச் சூட்டிய;

உதவிய மகேசர் பால இந்திரன் மகளை மணம் மேவி வீறு செந்திலில் உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே.

உரிய அடியேன்: உரிமை பூண்டவனான அடியேன்;

* திருமால் உள்ளிட்டவர்களைப் போரில் வென்ற ஜலந்தராசுரன், சிவனைப் போருக்கு அழைப்பதற்காகக் கயிலைக்குச் செல்ல, மறையவர் வடிவத்தில் அவனெதிரில் வந்த சிவபெருமான் தன் காலாலே ஒரு சக்கரத்தைத் தரையில் கீறி, ‘இதை முதலில் எடு.  அப்புறமாக கயிலைக்குப் போகலாம்’ எனவும், ஜலந்தராசுரன் அதை எடுக்க முயல்கையில் அந்தச் சக்கரம் கிளம்பி அவனுடைய கழுத்தை அரிந்தது.  அந்தச் சக்கரத்தை சிவபெருமானிடமிருந்து பெறவேண்டித் திருமால், சிவபெருமானை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார்.  அப்படி ஒருநாள், ஆயிரத்துக்கு ஒரு மலர் குறையவே, தன்னுடைய சிவந்த தாமரைக் கண்ணையே சிவனுக்குச் சூட்டினார்.  சக்ராயுதத்தைப் பெற்றார் என்ற வரலாற்றை சம்பந்தர்:

தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் பிறையணி சடையன்
நின்றநாள் காலை யிருந்தநாண் மாலை கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.

(பொருள்): சிவபெருமான் திருவருளால் தோன்றிய சக்கரப்படை சலந்தராசுரனை அழித்ததைக் கண்ட திருமால், அந்தச் சக்கரப்படையைத் தனக்கு அருள வேண்டித் தேவ லோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து சிவனைப் பூசித்தார். சிவபெருமான் சந்திரனை அணிந்த சடையையுடையவர். அவர் வீற்றிருந்தருளும் இடமாவது எல்லாக் காலத்திலும் மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற அந்தணர்கள் வாழ்கின்ற, திருவிழாக்கள் நீங்காத திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனுடைய திருநாமத்தை ஓத, வினை யாவும் நீங்கும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=31190&padhi=119&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தன்னுடைய திருவீழிமிழலைப் பதிகத்திலும் (மூன்றாம் திருமுறை, 119ம் பதிகம் ஏழாம்பாடல்) பிற இடங்களிலும் அப்பர் முதலானோர் பாடல்களிலும் இந்தச் செய்தி சொல்லப்படுகிறது.

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள் ... பரந்து கிடக்கின்ற இந்த உலகத்திலே, அளவுக்கு அதிகமான வஞ்சனையுடையவர்களான கருமியர்களிடம் (சென்று அவர்களைச்)

வியனில் உரை பானுவாய் வியந்து உரை ... சூரியனே என்று மிகவும் சிறப்பித்துச் சொல்லியும்;

பழுது இல் பெரு சீல நூல்களும் ... குற்றமற்றவையும் நல்லநெறியைச் சொல்லுவனவுமான நூல்களையும்;

தெரி சங்க பாடல் ... தேர்ந்தெடுத்த சிறப்புள்ள சங்கப் பாடல்களையும்;

பனுவல் கதை காவ்யமாம் எண் எண் கலை ... வரலாற்று நூல், கதைகள், கவியங்கள், அறுபத்துநான்கு கலைகள் என்று இவற்றையெல்லாமும்;

திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை... திருவள்ளுவ தேவர் சொன்னதான பொய்யாமொழியான திருக்குறள் முதலிய நூல்களையும்;

ஓதியே உணர்ந்து... ஓதியும் உணர்ந்தும்;

பல் சந்த மாலை மடல் பரணி கோவையார் கலம்பகம் முதல் உளது... பலவகையான சந்தங்களால் செய்யப்படும் பல்சந்த மாலை, மடல், பரணி, கோவை, கலம்பகம் முதலாக உள்ள;

கோடி கோள் ப்ரபந்தமும் வகைவகையில் ... கோடிக்கணக்கான பிரபந்தங்களை வகைவகையாகப் (பாடியும்);

ஆசுசேர் பெரும் கவி சண்டவாயு மதுரகவி ராஜன் நான் என்(று) ... (தமக்கு) ஆசுகவி என்றும்; பெருங்கவி என்றும்; சண்டமாருதம் என்றும்; மதுரகவிராஜன் நான் என்றும் பலவிதமான பட்டங்களைத் தாமே சூட்டிக்கொண்டு;

வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை ... வெண்குடை, வெற்றிச் சின்னமான பட்டயங்கள், வெற்றிக்கொடி, தாளம், மேளம் பல்லக்கு முதலான—

வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ ... சிறப்புச் சின்னங்களோடு திரிகின்ற, மதிமயக்கம் உள்ளதான அகந்தையை நான் ஒழிப்பேனாக.

அடல் பொருது பூசலே விளைந்திட எதிர் பொர ஒணாமல்...

(ஜலந்தராசுரனுடன்) வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக  அவனை எதிர்த்துப் போரிடமுடியாத திருமால்,

ஏக சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று சேவித்து ... ஏகனே! சங்கரா! ஹரஹர சிவா மகாதேவா என்று தியானித்து வணங்கி;

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி ... உலகத்தில் வெகுகாலம் சிவனைத் தொழுது, மனமுருகி;

வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ ... கொடிய பாசக்கயிறு முதலான ஆயுதங்களின் தொகுதியையும்; ஆடம்பரமும் மிக்க வலிமையும் உள்ளவனான ஜலந்தராசுரன் வருந்தி விழும்படியாக;

உடல் தடியும் ஆழி தா என ... அவனுடைய உடலைப் பிளப்பதற்காக சக்ராயுதத்தைத் தரவேண்டும் என்று வேண்டி,

அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் ... ஆயிரம் தாமரைப் பூக்களை சிவனுடைய பாதங்களில் இட்டுப் பூசித்துவந்த சமயத்தில், (ஒருநாள்),

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு ... ஆயிரத்துக்கு ஒரு மலர் குறையவும், அதற்கு ஈடாக தன்னுடைய சிவந்த தாமரைக் கண்ணையே இட்டு பூசித்த திருமாலுக்கு

உதவிய மகேசர் பால ... அந்தச் சக்ராயுதத்தைத் தந்து உதவிய மகசனுடைய பாலனே!

இந்திரன் மகளை மணம் மேவி ... இந்திரன் பெண்ணாகிய தேவயானையை திருமணம் செய்துகொண்டு,

வீறு செந்திலில் உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே. ... பெருமை நிறைந்த திருச்செந்தூரில் (உன்னிடம்) உரிமை பூண்ட அடியேனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வந்தருளிய தலைவனே.

சுருக்க உரை

ஜலந்தாசுரனை அழித்ததாகிய சக்கரப்படையைத் தனக்குத் தந்தருள வேண்டும் என்று பலகாலத்துக்கு அன்றாடம் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு வழிபட்ட திருமால், ஒருநாள் ஒருமலர் குறையவே அதற்கு ஈடாகத் தன் சிவந்த தாமரைக் கண்ணையே இட்டு வழிபட, அவருக்கு அந்தச் சக்கரப்படையைத் தந்த மகாதேவனுடைய பாலனே!  இந்திரன் மகளாகிய தேவானையை மணந்து, அடியேனை ஆண்டுகொள்வதறக்காகத் திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள தம்பிரானே!

பரந்ததாகிய இந்த உலகத்தில், மனத்தில் வஞ்சனை நிறைந்தவர்களான கருமியரிடம் போய் நின்று, பொருள்பெறுவதற்காக அவர்களை சூரியன், சந்திரன் என்றெல்லாம் சிறப்பித்துப் பாடியும்; சங்கப் பாடல், திருக்குறள் முதலான குற்றமற்ற பலவிதமான நூல்களைப் படித்தும்; தமக்குத் தாமே ஆசுகவியென்றும்; மதுரகவியென்றும்; சண்டமாருதம் என்றும் பலவிதமான பட்டங்களைச் சூட்டிக்கொண்டும்; வெற்றிக்கொடி, மேள தாளம் பல்லக்கு முதலியவற்றோடு திரிகின்ற அகந்தை என்னைச் சேராது ஒழிவதாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.