முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 268

திருச்செந்தூர் தலத்துக்கான இன்றைய பாடல், இறைவனுடைய திருப்பாதங்களிலே அன்புவைக்காமல், காமக் குரோத லோப மோக மத மாச்சரிய என்ற துர்க்குணங்களின்

Updated On : 10 ஜூன், 2016 at 4:04 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:58 PM

திருச்செந்தூர் தலத்துக்கான இன்றைய பாடல், இறைவனுடைய திருப்பாதங்களிலே அன்புவைக்காமல், காமக் குரோத லோப மோக மத மாச்சரிய என்ற துர்க்குணங்களின் மேல் பற்று வைத்திருக்கிறார்களே, இந்த உலகோர், இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், இவர்களை இத்தன்மையிலிருந்து விடுவித்தருள வேண்டும் என்று வேண்டுகிறது.

தானத் தானன தானத் தானன
      தானத் தானன                       தந்ததானா

சேமக் கோமள பாதத் தாமரை
         சேர்தற் கோதும                  நந்தவேதா
      தீதத் தேயவி ரோதத் தேகுண
         சீலத் தேமிக                     அன்புறாதே
காமக் ரோதவு லோபப் பூதவி
         காரத் தேயழி                    கின்றமாயா
      காயத் தேபசு பாசத் தேசிலர்
         காமுற் றேயும                   தென்கொலோதான்
நேமிச் சூரொடு மேருத் தூளெழ
         நீளக் காளபு                      யங்ககால
      நீலக் ரீபக லாபத் தேர்விடு
         நீபச் சேவக                      செந்தில்வாழ்வே
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
         லோகத் தேதரு                  மங்கைபாலா
      யோகத் தாறுப தேசத் தேசிக
         வூமைத் தேவர்கள்               தம்பிரானே.

 

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/268437519&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.