பகுதி - 270
நாகமலை, சர்ப்பகோத்ரம் என்றெல்லாம் அறியப்படும் திருச்செங்கோட்டுத் தலத்துக்கான திருப்புகழ் இது. ஒவ்வோரடியிலும் ஒன்று அல்லது இரண்டெழுத்துகள் நெடிலாகவும், மற்ற
நாகமலை, சர்ப்பகோத்ரம் என்றெல்லாம் அறியப்படும் திருச்செங்கோட்டுத் தலத்துக்கான திருப்புகழ் இது. ஒவ்வோரடியிலும் ஒன்று அல்லது இரண்டெழுத்துகள் நெடிலாகவும், மற்ற எல்லா எழுத்துகளும் குறிலாவும் உள்ள பல பாடல்களைப் பார்த்திருக்கிறோம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியிலும் தொங்கல் சீரில் மட்டும் (ஒற்றுசேர்த்து) 14, 15 ஆகிய இரண்டெழுத்துகள் மட்டுமே குறில். மற்ற அனைத்து எழுத்துகளும் நெடில். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பதின்மூன்றாம் எழுத்தும் வல்லொற்று—த், க், ப் மட்டுமே. இடையில் ய், ர் என்ற இரண்டு இடையின மெய்கள் மட்டுமே விலக்காகப் பயின்றுள்ளன. இவை ஓசைக்கு பாதிப்பை ஏற்படுத்தாததால், கணக்கில் சேருவதில்லை.
இது எந்த வேண்டுதலையும் வைக்காத துதிப்பாடல் என்று பலர் குறித்திருந்தாலும், ‘எனது ஆவி ஆமா காவாய்; தீயேன் நீர்வாயாதே ஈமத்து உகலாமோ’ என்று இரண்டாம் அடியின் மடக்கில் கேட்பதால், இது ஆவி உய்வடையும் வேண்டுதலை வைக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.
தானா தானா தானா தானா
தானா தானத் தனதானா
தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் துகலாமோ
காமா காமா தீனா நீணா
காவாய் காளக் கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக் கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
Advertisement
</p><p> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/268841426&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>