முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 273

உரைத்த மொழி தவறாதே: நான் சொல்லும் வார்த்தையைத் தவறாது பின்பற்று;

Updated On : 13 ஜூன், 2016 at 2:49 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:00 PM

பதச் சேதம்

சொற் பொருள்

மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே

Advertisement

உரைத்த மொழி தவறாதே: நான் சொல்லும் வார்த்தையைத் தவறாது பின்பற்று;

மயில் வாகனக் கடவுள் அடியார் தமக்கு அரசு மனமாயை அற்ற சுக மதிபாலன்

மனமாயை அற்ற: மன மயக்கம் இல்லாத; சுகமதி பாலன்: சுகசொரூபமான அறிவுள்ள சிறுவன்;

நினைவு ஏதுஉனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வ(ல்)ல பிரகாசன்

நினைவு ஏது உனக்கு: என்ன யோசிக்கிறாய், ஏன் யோசிக்கிறாய்; மலநிலை: ஆணவ, கன்ம, மாயா மலங்களை; பிரகாசன்: ஒளிரூபன்;

நிதி கா நமக்குறுதி அவரே பரப்பிரம(ம்) நிழலாளி யைத்தொழுது வருவாயே

நிதி: சங்க, பதும நிதிகள்; கா: கற்பகக்கா—கற்பகச் சோலை; பரம்பிரமம்: முழுமுதல்; நிழலாளி: நீதிமான் (நிழல்: நீதி (பிங்கல நிகண்டு);

இனமோ தொருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி

இனம் ஓது ஒருத்தி: நமக்கு உறவென்று சொல்லக்கூடிய ஒருத்தி; ருபி: ரூபி, அழகான வடிவம் உள்ளவள்; ஏர்: அழகு; மறைக்கு அரிய: வேதங்களுக்கு எட்டாத; இளையோள்: என்றும் இளையவள், குமரி; நிருவாணி: திகம்பரி, திக்கையே ஆடையாகக் கொண்டவள்;

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ்வேணி அப்பனுடை குருநாதா

ஈணெடுத்த: ஈன்றெடுத்த (விகாரம்—வடிவம் மாறிய சொல்); கலியாணி பக்கம் உறை: கல்யாணியின் வலதுபக்கத்தில் உறையும்; இதழ்: கொன்றை; வேணி: சடாபாரம்;

முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்து வர முது சூரரைத் தலைகொள் முருகோனே

முனவோர்: முன்னவர்களான அரி, அயன், ருத்திரன்; முதுசூரரை: தொன்மையான சூரபத்மன் ஆதியர்களை; தலைகொள்: தலையைக் கொய்யும்;

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு உருகு  முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே.

மொழிபாகு: தேன் பாகைப் போன்ற சொல்; மயிலாள்: வள்ளி; புலியுர்: புலியூர் (குறுக்கல் விகாரம்), சிதம்பரம்;

மனமே உனக்கு உறுதி புகல்வேன் ... மனமே, நீ உறுதி அடைவதற்கான நல்லனவற்றைச் சொல்வேன்;

எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே ... இப்படிச் சற்று அருகில் வா (உட்கார்); நான் சொல்லும் சொற்களைக் கேட்டு அவற்றைத் தவறாமல் கடைப்பிடி;

மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு ... மயிலை வாகனமாகக் கொண்ட கடவுளும்; அடியவர்களின் அரசனும்;

மனமாயை யற்ற சுக மதிபாலன் ... மனம் மாயை என்ற அனைத்தையும் கடந்தவனும், சுக ஸ்வரூபமான மதியையும் உடைய பாலனும்; (இதை ‘நிதிகா நமக்குறுதி’ என்பதோடு கொண்டுகூட்டிக் கொள்ளவேண்டும்.  இதற்கடுத்து வருவது ‘பக்கத்தில் உட்கார்’ என்று சொன்ன மனத்தோடு பேசுவது)

நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு ... என்ன யோசிக்கிறாய், எதற்கு யோசிக்கிறாய்? தேவலோகத்தையும் சிவலோகத்தையும் நமக்குத் தந்து,

மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன் ... நம்முடைய ஆணவ, கன்ம, மாயா மலங்களை வேரோடு அறுத்தெடுக்க வல்லவனும் ஜோதிஸ்வரூபனும்;

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம ... சங்கநிதியும், பதுமநிதியும், கற்பகச் சோலையும் ஆனவனுமான அவனே நமக்கு உறுதி.  (ஏனெனில் அவனே முழுமுதல்.

நிழல் ஆளியைத் தொழுது வருவாயே ... (இத்தகைய) நீதிமானை என்றென்றும் விடாமல் தொழுவாயாக.

இனம் ஓது ஒருத்தி ருபி ... நமக்கு உண்மையான உறவு என்று சொல்லக்கூடிய ஒரேயொருத்தியும்; பேரழகு நிறைந்தவளும்;

நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ... நலமும் அழகும் திகழ்பவளும்; வேதங்களுக்கும் எட்டாதவளும்; என்றும் இளையவளான குமரியும்;

ஒர் ஒப்புமிலி நிருவாணி ... தனக்கு ஒப்பு என்று எதுவும் யாரும் அற்றவளும், உடையற்ற திகம்பரியும்;

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை ... என்னை ஈன்றெடுத்தவளுமான கல்யாணியின் வலது பக்கத்தில் இருப்பவரும்,

(‘சிவனுடைய இடப்பாகத்தில் உறைபவள்’ என்று சொல்லப்படுவதற்கு மாறாக, ‘தேவியுடைய வலப்பாகத்தில் உறைபவன்’ என்று சொல்வது அருணகிரியாருக்கு வழக்கமே.

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றுவன்வந் தாலென்முன்னே

தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்

த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியாம்பகனைப்

பாகத்தில் வைக்கும் பரம கல்யாணிதன் பாலகனே—என்று கந்தர் அலங்காரத்தில் சொல்வதைக் காண்க.)

இதழ்வேணியப்பனுடை குருநாதா ... கொன்றையைச் சூடிய சடாமுடியை உடையவருமான சிவபெருமானுடைய குருநாதனே!

முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர ... முன்னவர்களாகிய அரி, பிரமன், ருத்திரன் ஆகியோர் துதித்தபடியும் மலர்மாரியைப் பொழிந்தபடியும் வர,

முது சூரரைத் தலை கொள் முருகோனே ... தொன்மையானவர்களான சூரபத்மனாதியருடைய தலையைக் கொய்யும் முருகனே!

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு ... தேன்பாகு போன்ற இனிதாகப் பேசுபவளும், முத்துப் போன்ற பற்களை உடையவளுமான வள்ளியை நினைத்து

உருகு முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே. ... மனம் உருகும் முருகா, தமிழ் மணம் கமழ்வதான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை:

மனமே!  இப்படிவா.  அருகில் உட்கார்.  நான் சொல்வதைக் கேட்டு நட.

நமக்கு உண்மையான உறவு என்று சொல்லத்தக்கவளும்; ஒப்பற்றவளும்; பேரழகியும்; வேதங்களுக்கும் எட்டாதவளும்; இளையவளும்; திகம்பரியும்; என்னைப் பெற்றெடுத்தவளுமான கலியாணியம்மையின்

வலதுபாகத்திலே உறைகின்றரும்; கொன்றையைச் சூடிய சடாமுடியை உடையவருமான சிவபெருமானின் குருமூர்த்தி; யாருக்கும் தலைவர்களான அரியும் பிரமனும் ருத்திரனும் மலர்மாரியைப் பொழிந்தபடித் துதிக்க பழைமை வாய்ந்த சூரபத்மனாதியருடைய தலையைக் கொய்த முருகனை; மயில்வாகனம் ஏறும் தெய்வத்தை; அடியவர்களுக்கெல்லாம் அரசனை; மனத்தையும் அதைக் கட்டக்கூடிய மாயையும் கடந்தவனை; தேவலோகத்தையும் சிவலோகத்தையும் நமக்குத் தருபவனை; நம்முடைய ஆணவ, கன்ம, மாயா மலங்களை வேரறுக்க வல்லவனை நமக்கு சங்கநிதி, பதுமநிதியைப் போலவும், கற்பகச் சோலையைப் போலவும் நினைத்ததையெல்லாம் தரவல்ல முழுமுதற் கடவுளை; நீதிமானைத் தவறாது வழிபட்டு வா.  இதுவே உனக்கு உறுதி.  இதற்கேன் யோசிக்கிறாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.