பகுதி - 168
பத்துப்பாட்டிலே ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை நான்காவது படைவீடாகத் திருவேரகத்தைச் சிறப்பிக்கிறது.
பத்துப்பாட்டிலே ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை நான்காவது படைவீடாகத் திருவேரகத்தைச் சிறப்பிக்கிறது. சங்க கால நூலில் இடம்பெறும் அளவுக்குத் தொன்மையான தலம் திருவேரகம் எனப்படும் சுவாமிமலை. முருகன் தகப்பன் சாமியாக நின்ற பிரணவப் பொருளை உபதேசித்த தலம். திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பாடிய தலம் என்பதாலோ என்னவோ இப்பாடலில் குருநாதர், ‘வளவாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து’ உலகம் உவப்ப என்று அடியெடுத்துக் கொடுத்தவனே என்று பாடுகிறார். திருமுருகாற்றுப்படை,
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
என்று தொடங்குகிறது. இதற்கு அடியெடுத்துக் கொடுத்தவன் முருகன் என்பது குருநாதர் வாக்கு.
செடிநேர் உடல் என்கிறாரல்லவா, செடி என்பது அடர்த்தியான என்று பொருள்படும். இதனால்தான் ‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே’ என்றார் குலசேகர ஆழ்வார். இப்போது பாடலைப் பார்ப்போம். வல்லொற்றும் மெல்லொற்றும் மாறிமாறிப் பின்னியுள்ள சந்த அமைப்பு.
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
தனனா தனத்த தந்த - தனதான
Advertisement
கடிமா மலர்க்கு ளின்ப முளவே ரிகக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த - தொடைமாலை
கனமே ருவொத்தி டும்ப னிருமா புயத்த ணிந்த
கருணா கரப்ர சண்ட - கதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீ துநித்த முந்தண்
முடியா னதுற்று கந்து - பணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீ ரனுக்கு கந்து
மலர்வா யிலக்க ணங்க - ளியல்போதி
அடிமோ னைசொற்கி ணங்க வுலகா முவப்ப என்று
னருளா லளிக்கு கந்த - பெரியோனே
அடியே னுரைத்த புன்சொ லதுமீ துநித்த முந்த
ணருளே தழைத்து கந்து - வரவேணும்
செடிநே ருடற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதா னலக்க ணிங்க - ணுறலாமோ
திறமா தவர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவே ரகத்த மர்ந்த - பெருமாளே.
</p><p align="JUSTIFY"> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/249431293&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>