பகுதி - 169
வளமும் வாய்மையும் நிறைந்த சொற்களால் நூல்களைப் பாடுவதற்காக நக்கீரருக்கு உன் மலர்வாயல் இலக்கணத்தின் தன்மைகளை எடுத்துச் சொல்லி,
பதச் சேதம் | சொற் பொருள் |
| கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு(ம்) நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை | கடி: நறுமணம்; மாமலர்: பெரிய மலர்; வேரி: தேன்; கக்கும்: சிந்தும்; நண்புதரு: அன்பைப் பெருக்கும்; கடப்பு: கடம்பு; தொடை மாலை: இரண்டுக்கும் மாலையென்றே பொருள். |
| கன மேரு ஒத்திடும் ப(ன்)னிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர்வேலா | கனமேரு: பருத்ததும், மேருமலையைப் போன்றதும்; ப்ரசண்ட: கடுமை(யும்); கதிர்வேல்: ஒளியும் உடைய வேலை ஏந்தியவனே; |
| வடிவு ஆர் குறத்தி தன் பொ(ன்)னடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே | வடிவு: அழகு; ஆர்: நிறைந்த; தண் முடி: குளிர்ச்சியான கிரீடங்கள்; |
| வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி | வள வாய்மை: வளமும் உண்மையும் நிறைந்த; மலர்வாயில்: உன்னுடைய மலர்வாயால்; |
| அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே | |
| அடியேனும் உரைத்த புன் சொல் அது மீது நித்தமும் உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் | தண்ணருள்: குளிர்ச்சி நிறைந்த அருள்; |
| செடி நேர் உடல் குடம்பை தனின் மேவி உற்றிடு இந்த படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ | செடிநேர்: (பாவச் செயல்களே) அடர்த்தியாக நிறைந்துள்ள; உடற் குடம்பை: உடல் என்னும் கூட்டில்; இந்தப்படிதான்: இப்படியே; அலக்கண்: துன்பம்; |
| திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே. | மாதவர்: மாமுனிவோர்; பாத பத்மம்: பாதத் தாமரை(களாலே); உய்ந்த: உய்வுபெற்ற; |

கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு(ம்) … நறுமணம் நிறைந்த பெரிய பூவுக்குள்ளிருந்து இன்பகரமான தேனைச் சிந்துவதும்;

நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை... அன்பைப் பெருக்குவதுமாக, சிறந்த கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட மாலையை,

கன மேரு ஒத்திடும் ப(ன்)னிரு மா புயத்து அணிந்த … பருத்ததும், மேருமலையை ஒத்ததுமான பன்னிரண்டு தோள்களில் அணிந்த,

கருணாகர ப்ரசண்ட கதிர்வேலா… கருணையே வடிவானவனே, கடுமையும் ஒளியும் நிறைந்ததான வேலை ஏந்துபவனே!

வடிவு ஆர் குறத்தி தன் பொ(ன்)னடி மீது நித்தமும் … அழகு நிறைந்த குறத்தி மகளான வள்ளியம்மையின் திருப்பாதங்களின்மேல் தினந்தோறும்,

தண் முடியானது உற்று உகந்து பணிவோனே… குளிர்ச்சி பொருந்திய உன் கிரீடங்கள் படியும்படியாக உவப்புடன் விழுந்து பணிபவனே!

(ஊடல் நேரத்தில் மனையாள் பாதத்தில் பணிவது இயல்பு. பரமேஸ்வரனுக்கும் இது சொல்லப்பட்டிருக்கிறது.)

வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து … வளமும் மெய்மையும் உள்ள சொற்களால் நூல்களைப் பாட வல்ல நக்கீரனக்கு, உவப்புடன்

மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி … மலர்போன்ற உன் வாயால் இலக்கணங்களின் இயல்பை எடுத்துச் சொல்லி,

அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று … பாட்டின் அங்கங்களான அடி, மோனை சொல் போன்றவற்றிற்கு ஏற்ப, ‘உலகாம் உவப்ப’ (உலகம் உவப்ப) என்று

உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே … உன்னுடைய அருளால் அடியெடுத்துக் கொடுக்க விரும்பிய பெரியவனே!

அடியேனும் உரைத்த புன் சொல் அது மீது நித்தமும் உன் … அடியேன் சொல்லியுள்ள இந்தப் புன்மையான சொற்களிலும் அனுதினமும் உன்னுடைய,

தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் … குளிர்ந்த அருளே உவப்போடு பெருகி வரவேண்டும்.

செடி நேர் உடல் குடம்பை தனின் மேவி உற்றிடு … பாவங்கள் அடர்த்தியாகப் பற்றியிருப்பதால் செடியை ஒத்திருக்கும் இந்த உடலாகி கூட்டில் (அடியேன்) பொருந்தியிருந்து,

இந்த படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ … இப்படியொரு துன்பத்தை இங்கே அனுபவித்திடலாமோ?

திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த … திறம் வாய்ந்த பெரிய முனிவர்கள் தம் உள்ளம் கனிந்து உருகி உன்னுடைய பாதங்களான இரண்டு தாமரைகளால் உய்வடைகின்றதான

திருவேரகத்து அமர்ந்த பெருமாளே… திருவேரகமான சுவாமிமலையில் வீற்றுள்ள பெருமாளே!

சுருக்க உரை

வளமும் வாய்மையும் நிறைந்த சொற்களால் நூல்களைப் பாடுவதற்காக நக்கீரருக்கு உன் மலர்வாயல் இலக்கணத்தின் தன்மைகளை எடுத்துச் சொல்லி, ‘உலகம் உவப்ப’ என்று பாட்டின் அங்கங்களுக்குப் பொருந்திவருமாறு அடியெடுத்துக் கொடுத்த பெரியவனே! அடியவனான நான் சொல்லும் இந்தப் புன்மையான சொற்கள் மேலும் உன்னுடைய திருவருளானது உவப்போடு பொங்கிப் பெருக வேண்டும்.

நறுமணம் நிறைந்ததும் தேனைச் சிந்துவதும், அன்பைப் பெருக்குவதுமான கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட மாலையை, தங்க மயமான மேருவைப் போன்றவையும், பருத்தவையுமான பன்னிரண்டு தோள்களில் அணிபவனே! கருணையின் வடிவமே! கடுமை உடையதும் ஒளிவீசுவதுமான வேலை ஏந்தியவனே! அழகிய குறமகளான வள்ளியம்மையின் பாதத்தில் உன்னுடைய திருமுடிகள் பதியுமாறு வணங்குவதில் மகிழ்பவனே!

சிறந்த தவத்தோர்கள் தங்களுடைய மனம் கனிந்து உருகி, தாமரை மலர் போன்ற உன் இரு பாதங்களால் உய்வுபெற்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! துன்பம் நிறைந்த இந்த உடலான கூட்டில் சிக்கி அடியேன் துன்பத்தை அனுபவிப்பது தகுமா? துன்பம் நிறைந்ததான பிறவிக்கடலிலிருந்து அடியேனை விடுவித்து அருள வேண்டும்.

Advertisement