முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 172

இலங்கையின் கண்டி கதிர்காமக் கந்தன் ஆலயம் மிகத் தொன்மையான ஒன்று.  சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று விக்கிபீடியா (http://tiny.cc/4gjj9x) குறிக்கிறது. 

Updated On : 29 பிப்ரவரி, 2016 at 2:49 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM

இலங்கையின் கண்டி கதிர்காமக் கந்தன் ஆலயம் மிகத் தொன்மையான ஒன்று.  சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று விக்கிபீடியா (http://tiny.cc/4gjj9x) குறிக்கிறது.  கதிர்காமக் கந்தனைக் குறித்து அருணகிரியார் 13 பாடல்களைப் பாடியுள்ளார்.  முதல் பாதி முழுக்க குறிலாகவும், ஒவ்வொரு அடியில் 17-வது, 24-வது எழுத்துகள் மட்டும் நெடிலாகவும் அமைந்திருக்கும் சந்தம் கொண்ட பாடல்.  தாளகதிக்கான வகையுளியிலே (சொல் பிளவு) சொற்கள் பிரிந்திருக்கும் விதம் சற்று மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. 

எடுத்துக்காட்டாக, ‘மாவிற் புகுங்கந் தவழாது’ என்பதை ‘மாவில் (குதிரையில், மயிலில்) புகும் (ஏறும்) கந்த, வழாது’ என்று பிரிக்க வேண்டும்.  முதலடியில் உள்ள வகிர் அதிர்’ என்பதற்கு, வரிகளை உடைய புலி என்று பொருள்.  அடியேன் உன்னை இதமான மொழிகளால் பேசினாலும், ஆணவத்தோடு பேசினாலும் ஏழையான அடியேனிடம் கருணை காட்டுபவனே என்று சொல்லிப் பாடலை முடிக்கிறார்.  பிரிப்பதற்கு சிக்கலான பாடல்.  தணிகைமணி செங்கல்வராய பிள்ளையைப் போன்ற மகான்களுடைய உதவியால் பொருளை நிர்ணயித்துக்கொள்ள முடிகிறது.  பொருளை நாளைக்கு ஓரளவு விரிவாகப் பார்ப்போம். 

கதிர்காமம் (நன்றி இணையம்)

Advertisement

தனதன  தனதன  தனதன  தனதன
          தானத்  தனந்த - தனதான

கடகட  கருவிகள்  தபவகி  ரதிர்கதிர்

           காமத்  தரங்கம் - மலைவீரா

        கனகத  நககுலி  புணரித  குணகுக

          காமத்  தனஞ்சம் - புயனோட

வடசிக  ரகிரித  விடுபட  நடமிடு

          மாவிற்  புகுங்கந் - தவழாது

       வழிவழி  தமரென  வழிபடு  கிலனென

         வாவிக்  கினம்பொன் - றிடுமோதான்

அடவியி  ருடியபி  நவகும  ரியடிமை

            யாயப்  புனஞ்சென் - றயர்வோனே

      அயிலவ  சமுடன  ததிதிரி  தருகவி

          யாளப்  புயங்கொண் - டருள்வோனே

இடமொரு  மரகத  மயில்மிசை  வடிவுள

         ஏழைக்  கிடங்கண் - டவர்வாழ்வே

     இதமொழி  பகரினு  மதமொழி  பகரினு  

        மேழைக்  கிரங்கும் - பெருமாளே.

</p><p> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/249443880&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.