முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 396

‘கண் பார்த்து அருளவேண்டும்’

Updated On : 2 நவம்பர், 2016 at 3:40 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:05 AM

பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இன்றைய பாடல், இறைவனைக் ‘கண் பார்த்து அருளவேண்டும்’ என்று வேண்டுகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகள்; தொங்கல்சீர் நீங்கலாக அத்தனை எழுத்துகளும் குறில்.  ஆங்காங்கே பயிலும் மிகச்சில இடையொற்று மெல்லொற்றுகளைத் தவிர்த்து வேறெங்கும் ஒற்று பயிலவில்லை.  பாடலைப் பார்ப்போம்.

தனனதன தனனதன தனனதன தனனதன
      தனனதன தனனதன                தனதான

Advertisement

வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
         வயிரமர கதமகர                 மளவாக
      வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
         வளையிளைஞ ருயிர்கவர        வருமாய
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
         எழுபிறவி நெறியொழிய          வழிகாணா
      இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
         திருநயன கருணைசிறி           தருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை
         பயறுபெரு வயிறுநிறை           யவிடாமுப்
      பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
         பரியதனி யெயிறுகொடு          குருநாடர்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
         கடலுலகு நொடியில்வரு         மதிவேகக்
      கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
         கடகமுட னமர்பொருத           பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.