முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 704

மோட்சத்தைத் தந்தருளவேண்டும்

Updated On : 3 டிசம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:46 PM

‘மோட்சத்தைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் காஞ்சித் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் மூன்று குறில், ஒரு நெடில் (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்று என நான்கெழுத்துகளையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு குறில், (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்று, ஒரு குறில் என இரண்டு எழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் ஒரு குறில், (கணக்கில் சேராத) ஒரு மெல்லொற்று, ஒரு குறில் என்று இரண்டெழுத்துகளையும் கொண்டு அமைந்துள்ளன.


தனதனாத் தத்த தந்த தனதனாத் தத்த தந்த
      தனதனாத் தத்த தந்த தனதான

Advertisement

அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
         அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத

அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்புகழ்ந்து
         அவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச்

சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
         தெரிவைமார்க் குச்சொ ரிந்து அவமேயான்

திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
         தெளியமோ க்ஷத்தை யென்று அருள்வாயே

இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
         இடபமேற் கச்சி வந்த உமையாள்தன்

இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
         இறைவர்கேட் கத்த குஞ்சொ லுடையோனே

குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
         குருவியோட் டித்தி ரிந்த  தவமானைக்

குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
         குமரகோட் டத்த மர்ந்த பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.