பகுதி - 710
உன் கழலை நினைக்கும் பேற்றை
‘உன் கழலை நினைக்கும் பேற்றைத் தரவேண்டும்’ என்று வேண்டுகிற இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டு அமைந்திருக்கின்றன.
தனதன தனதந் தனதன தனதந்
தனதன தனதந் தனதான
Advertisement
இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
புவிதனி லினமொன் றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
மிடர்கொடு நடலம் பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
டுயிரினை நமனுங் கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
கழலிணை கருதும் படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
டிசைகிடு கிடவந் திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
சிடவலி யொடுகன் றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
புடையவ ருயஅன் றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையி லுறையும் பெருமாளே.