முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 714

திருவடிகளின் நிழலிலே புகுந்திருக்க வேண்டும்

Updated On : 13 டிசம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:48 PM

‘உன்னுடைய திருவடிகளின் நிழலிலே புகுந்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஐந்து குற்றெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு முடியும் மூன்றெழுத்துகளையும் கொண்டவை.


தனதன தனனா தனதன தனதனா
      தனதன தனனா                     தனதான

Advertisement

கெஜநடை மடவார் வசமதி லுருகா
         கிலெசம துறுபாழ்                வினையாலே

கெதிபெற நினையா துதிதனை யறியா
         கெடுசுக மதிலாழ்                மதியாலே

தசையது மருவீ வசையுட லுடனே
         தரணியில் மிகவே               யுலைவேனோ

சததள மலர்வார் புணைநின கழலார்
         தருநிழல் புகவே                 தருவாயே

திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
         திருநெடு கருமால்               மருகோனே

திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
         திரிபுரை யருள்சீர்                முருகோனே

நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
         நிறையயில் முடுகா              விடுவோனே

நிலமிசை புகழார் தலமெனு மருணா
         நெடுமதில் வடசார்               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.