பகுதி - 464
இப்பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது.
இந்த எளிய சந்த அமைப்பைக் கொண்ட பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது. ‘உன்னை என்னுளே அறிவதற்கான அன்பைத் தந்தருள்வாயாக’ என்று இறைவனை வேண்டும் பாடல்.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளை உடைய பாடல்; தொங்கல் சீரில் பயிலும் நெடிலை ஒழித்து வேறெங்கும் நெடில் பயிலாமல் எல்லா எழுத்துகளும் குறிலாகவே உள்ள சந்தம். ஒவ்வொரு மூன்றாம் சீரிலும் இரண்டாம் எழுத்து மெல்லொற்று, நான்காம் எழுத்து வல்லொற்று. இந்த வல்லொற்று, தாளத்துக்குத் திருப்புமுனையாக அமைவதைக் காணலாம். பெரும்பாலும் இடையினமும் மெல்லினமும் கலந்த நடை.
தனனதன தனன தந்தத் தனதானா
தனனதன தனன தந்தத் தனதானா
Advertisement
இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் தருவாயே
மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே.