முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 467

பல குன்றுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே

Updated On : 31 ஜனவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன்

Advertisement

 

 

அபயம் புகுவது என்று நிலை காண

 

நிலைகாண: நிலைபெற;

இதயம் தனில் இருந்து க்ருபை ஆகி

 

 

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே

 

இடர்: துன்பங்கள்; சங்கைகள்: சந்தேகங்கள்;

எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும்

 

எதிர் அங்கு ஒருவரின்றி: இணையாக யாருமில்லாமல்;

இறைவன் தனது பங்கில் உமை பாலா

 

 

பதி எங்கிலும் இருந்து விளையாடி

 

 

பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே.

 

 

அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன்... அதிர்வதான கழல்களை அணிந்த உன் பாதங்களைத் தொழுபவனான உன் அடியேனாகிய யான்,

உன் அபயம் புகுவ தென்று நிலைகாண... உன்னைத் தஞ்சம் புகுந்து (நிலையற்ற இவ்வுலகத்திலே) நிலைபெற்று நிற்கும்படியாக,

இதயந் தனிலி ருந்து க்ருபையாகி... கருணையோடு என் உள்ளத்திலே வந்தமர்ந்து,

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே... (அந்த உள்ளத்திலுள்ள) துன்பங்களும் ஐயங்களும் கலங்கிக் கெடுமாறு அருள்புரிய வேண்டும்.

எதிர் அங்கொருவர் இன்றி நடமாடும்... தன்னை நிகர்த்தவர் எவருமில்லாமல் நடனம் புரிபவரான,

இறைவன் தனது பங்கில் உமை பாலா... சிவபிரானுடைய இடது பாகத்தில் இருப்பவரான உமையம்மையின் மகவே!

பதியெங்கிலுமிருந்து விளையாடி... எல்லாத் தலங்களிலும் எழுந்தருளியிருந்தும் பல திருவிளையாடல்களைப் புரிந்தும்

பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே.... பல குன்றுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

தனக்கு இணையானவர் யாருமில்லாமல் நடனமாடுபவரான சிவபிரானுடைய இடது பாகத்தில் உறைபவரான உமையம்மையின் பாலனே!  எல்லா திருத்தலங்களிலும் எழுந்தருளி, பல திருவிளையாட்களைப் புரிந்து, பல குன்றுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!

ஒலிக்கின்ற கழலையணிந்த உன் திருப்பாதங்களைப் போற்றுபவனான அடியேன், உன்னிடத்திலே தஞ்சம் புகுவதும் எப்போது?  (நிலையற்றதான இந்த உலகத்திலே) அடியேன் நிலைபெறுமாறு நீ என்னுடைய உள்ளத்தில் வீற்றிருந்து, அருள்கூர்ந்து என்னுடைய மனத்திலே நிறைந்திருக்கின்ற துக்கங்களையும் ஐயங்களையும் களைந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.