முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 604

வைத்திருக்கும் பற்றை அறுக்க

Updated On : 12 ஜூலை, 2017 at 11:34 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:53 PM


‘முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்ற ஈற்றடியோடு முடியும் பத்து அல்லது பதினோரு பாடல்களில் இதுவும் ஒன்று.  பொருளின் மீது வைத்திருக்கும் பற்றை அறுக்கக் கோரும் இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அமைப்பு முறையில் இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில்.  ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று. 


தத்தா தத்தா தத்தா தத்தா
                               தத்தா தத்தத்   தனதான

Advertisement

பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
        பொய்ப்போ கத்தைப்  பகர்வார்தம்

பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
             கித்தே கைக்குப்  பொருள்தேடித்

தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
                              திக்கோ டிப்பச்  சிமமான

திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
                    விக்கோ டிக்கெட்   டிடலமோ

தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
                           ரைச்சா ரத்தற் பரமானாய்

தப்பா முப்பா லைத்தே டித்தே
                   சத்தோர் நிற்கத்  தகையோடே

முற்கா னப்போ தைக்கா கப்போய்
           முற்பால் வெற்பிற்  கணியானாய்

முத்தா  முத்தீ யத்தா சுத்தா
                        முத்தா முத்திப்  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.