முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 578

திருப்போரூருக்கான இன்றைய பாடல்

Updated On : 12 ஜூன், 2017 at 10:44 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:14 PM

திருப்போரூருக்கான இன்றைய பாடல் முழுவதுமே துதிகளால் ஆனது.  எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காதது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளை உடைய இந்தப் பாடலில் எல்லாச் சீர்களிலுமே சம அளவிலாக மூன்று மூன்று எழுத்துகள் பயின்றாலும் அவற்றுள்ளும் வேறுபாடு பயில்கிறது.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் உள்ள மூன்றெழுத்துகளும் குற்றெழுத்துகள்; இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்களிலும் மூன்றெழுத்துகள் பயின்றாலும் இவற்றில் முதலெழுத்து நெடில்; மற்ற இரண்டும் குறில். 

தனன தானன தானன தனன தானன தானன
      தனன தானன தானன                     தனதான

திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ 
         திமிர மேயரி சூரிய                     திரிலோக
      தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
         சிவசு தாவரி நாரணன்                 மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
         குணக லாநிதி நாரணி                  தருகோவே
      குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
         குறவ மாமக ளாசைகொள்             மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
         பசுர பாடன பாளித                     பகளேச
      பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
         பரவு பாணித பாவல                   பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
         சமய நாயக மாமயில்                  முதுவீர 
      சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
         சமர மாபுரி மேவிய                    பெருமாளே.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.