பகுதி - 504
அடியேன் மரக்கட்டையைப் போல
அடியேன் மரக்கட்டையைப் போல இருந்தபடி மும்மலங்களால் மூடப்பட்டு அழியாமல் காத்தருள வேண்டும் என்று கேட்கின்ற இந்த சிறிய பாடலும் வைத்தீசுரன் கோவிலுக்கானது.
அடிக்கு ஒற்றொழித்துப் பதினோரு எழுத்துகள். முதற்சீரில் நான்கெழுத்துகள்; கணக்கில்சேராத மூன்றாம் எழுத்து வல்லொற்று. இரண்டாம் சீரில் இரண்டெழுத்துகள்; முதலெழுத்து நெடில்; கணக்கில் வராத மூன்றாமெழுத்து வல்லொற்று.
தனத்தன தானத் தனதான
உரத்துறை போதத் தனியான
உனைச்சிறி தோதத் தெரியாது
மரத்துறை போலுற் றடியேனும்
மலத்திருள் மூடிக் கெடலாமோ
பரத்துறை சீலத் தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் றருள்வோனே
வரத்துறை நீதர்க் கொருசேயே
வயித்திய நாதப் பெருமாளே.
Advertisement