பகுதி - 702
எந்த மாதிரியான நிலையை அடைந்தாலும்
‘எந்த மாதிரியான நிலையை அடைந்தாலும் உன்னுடைய உபதேச மொழியை மறவேன்’ என்று சொல்லும் இப்பாடல் காஞ்சித் தலத்துக்கானது.
எல்லாச் சீர்களுமே ஒரு நெடிலோடு தொடங்குகின்ற இந்தப் பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகள் உள்ளன. ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும் (கணக்கில் சேராத) ஒரு மெல்லொற்றையும் ஒரு வல்லொற்றையும்; இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்க;ள ஒரு நெடிலையும் இரண்டு குற்றெழுத்துகளையும் கொண்டதாக அமைந்துள்ளன.
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன தனதானா
Advertisement
வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய
நீந்திப்பது மாதியை மீதினி
லூர்ந்துற்பல வோடையில் நீடிய உகள்சேலை
வார்ந்துப்பக ழீயேதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை
சேர்ந்துக்குழை யோடுச லாடிய விழியாலே
சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்
வீழ்ந்திப்படி மீதினி லேசிறி தறிவாலே
சாந்தப்பிய மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
மாய்ந்திப்படி போகினு மோர்மொழி மறவேனே
சாந்தப்பெரு நீர்வெள மாகவே
பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
காந்தப்பெரு நாதனு மாகிய மதனாலே
தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண வெனதாளம்
காந்தப்பத மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ
போந்தப்பெரு மானகுரு காவொரு பெரியோனே
காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மா நகர் மேவிய பெருமாளே.