பகுதி - 812
எல்லாவற்றையும் பொன்னாக..
‘எல்லாவற்றையும் பொன்னாக மாற்றவேண்டும்’ என்ற ரசவாதப் பற்று அழியவேண்டும் என்று கோருகின்ற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று—மூன்று குற்றெழுத்துகள் அமைந்துள்ளன.
தனன தனன தனன தனன
Advertisement
தனன தனன தனதான
துயர மறுநின் வறுமை தொலையு
மொழியு மமிர்த சுரபானம்
சுரபி குளிகை யெளிது பெறுக
துவளு மெமது பசிதீரத்
தயிரு மமுது மமையு மிடுக
சவடி கடக நெளிகாறை
தருக தகடொ டுறுக எனுமி
விரகு தவிர்வ தொருநாளே
உயரு நிகரில் சிகரி மிடறு
முடலு மவுணர் நெடுமார்பும்
உருவ மகர முகர திமிர
வுததி யுதர மதுபீற
அயரு மமரர் சரண நிகள
முறிய எறியு மயில்வீரா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய பெருமாளே.