பகுதி - 844
ஞன நெறியைப் பெறவேண்டும்
‘ஞன நெறியைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல், பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குறில் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என்று நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தானனா தத்ததன தானனா தத்ததன
Advertisement
தானனா தத்ததன தனதான
வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்
வீசுபா ணத்தைநிக ரெனலாகும்
வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை
யாடிமோ கித்திரியும் வெகுரூப
கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி
காரமோ டத்தெளிய அரிதான
கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி
கூடலா கப்பெருமை தருவாயே
வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ
வாளியோ டக்கருது மநுராமன்
வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை
யூதிமோ கித்துவிழ அருள்கூரும்
நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு
நீசர்வாழ் வைக்களையு மிளையோனே
நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு
நீபதோ ளொப்பரிய பெருமாளே.