பகுதி - 848
நற்கதி பெறுவநற்கதி பெறுவதைக்..
நற்கதி பெறுவதைக் கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்றும் ஆறுமான சீர்கள் தொங்கல் சீர்களாகவும் அமைந்துள்ளன.
தனதத்த தத்த தனதான
Advertisement
தனதத்த தத்த தனதான
மனைமக்கள் சுற்ற மெனுமாயா
வலையைக்க டக்க அறியாதே
வினையிற்செ ருக்கி யடிநாயேன்
விழலுக்கி றைந்து விடலாமோ
சுனையைக்க லக்கி விளையாடு
சொருபக்கு றத்தி மணவாளா
தினநற்ச ரித்ர முளதேவர்
சிறைவெட்டி விட்ட பெருமாளே.