முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 784

மோகமென்னும் சேற்றில் அடியேன்...

Updated On : 18 மார்ச், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:00 PM

‘மோகமென்னும் சேற்றில் அடியேன் வீழாமல் ஆண்டருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திரிசிராப்பளிக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.
 

தனதன தந்தன தாத்தன

Advertisement

      தனதன தந்தன தாத்தன

      தனதன தந்தன தாத்தன                   தனதான

அரிவையர் நெஞ்சுரு காப்புணர்

         தருவிர கங்களி னாற்பெரி

         தவசம்வி ளைந்துவி டாய்த்தடர்        முலைமேல்வீழ்ந்

      தகிலொடு சந்தன சேற்றினில்

         முறுகியெ ழுந்தெதிர் கூப்புகை

         யடியின கம்பிறை போற்பட            விளையாடி

பரிமளம் விஞ்சிய பூக்குழல்

         சரியம ருங்குடை போய்ச்சில

         பறவைக ளின்குர லாய்க்கயல்          விழிசோரப்

      பனிமுக முங்குறு வேர்ப்பெழ

         இதழமு துண்டிர வாய்ப்பகல்

         பகடியி டும்படி தூர்த்தனை             விடலாமோ 

சரியையு டன்க்ரியை போற்றிய

         பரமப தம்பெறு வார்க்கருள்

         தருகணன் ரங்கபு ரோச்சிதன்            மருகோனே

      சயிலமெ றிந்தகை வேற்கொடு

         மயிலினில் வந்தெனை யாட்கொளல்

         சகமறி யும்படி காட்டிய                 குருநாதா

திரிபுவ னந்தொழு பார்த்திபன்

         மருவிய மண்டப கோட்டிகள்

         தெருவில்வி ளங்குசி ராப்பளி           மலைமீதே

      தெரியஇ ருந்தப ராக்ரம

         உருவளர் குன்றுடை யார்க்கொரு

         திலதமெ னும்படி தோற்றிய            பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.