பகுதி - 816
அனுபூதி பெறவேண்டும்
‘அனுபூதி பெறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல்.ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும்; தொங்கல் சீரில் இரண்டு குறிலும் இரண்டு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனத்தத் தானத் தனதானா
Advertisement
கருப்பற் றூறிப் பிறவாதே
கனக்கப் பாடுற் றுழலாதே
திருப்பொற் பாதத் தநுபூதி
சிறக்கப் பாலித் தருள்வாயே
பரப்பற் றாருக் குரியோனே
பரத்தப் பாலுக் கணியோனே
திருக்கைச் சேவற் கொடியோனே
செகத்திற் சோதிப் பெருமாளே.