பகுதி - 924
உன்னை எப்போதும் வழிபட..
‘உன்னை எப்போதும் வழிபட வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பழநிக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, எட்டு ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு-நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனத்த தானன தனதன தனதன தனதானா
Advertisement
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை பெருமாளே.