1914-ஆம் ஆண்டு தொடங்கி, நான்கு வருடங்களாக நடந்து வந்த முதலாம் உலக யுத்தமானது 1918 ஆம் வருடம், 11-ஆவது மாதம், 11-ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
அன்று காலை ஐந்து மணி அளவில், ஜெர்மனி போதிய ஆள்பலம் மற்றும் யுத்த தளவாடங்கள், உணவுப்பொருட்கள் என எல்லாமே தீர்ந்து போன நிலையில், பிரான்சில் உள்ள கோம்பேய்ன் என்ற இடத்தில் நேச நாடுகளிடம் ஆயுத ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த மஹா யுத்தத்தில் மரணமடைந்த போர் வீரர்களின் எண்ணிக்கை 90 லட்சமாகும். மேலும் 2.10 கோடி பேர் காயமடைந்தனர். ஜெர்மனி, ரஷ்யா,ஆஸ்திரியா, ஹங்கேரி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அனைத்து நாடுகளிலும் ஏறக்குறைய தலா பத்து லட்சம் பேர் மாண்டனர்.
இவை தவிர நோய், பசி, பஞ்சம், பட்டினி போன்ற காரணங்களால் மரணம் அடைந்த பொது மக்களின் எண்ணிக்கை 50 லட்சமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.