21.11.1877: ஒலிகளை பதிவு செய்யும் போனோகிராபி கருவியை எடிசன் கண்டறிந்த தினம் இன்று!
கேட்கும் ஒலிகளைப் பதிவு செய்து அவற்றை மீண்டும் ஒலிபரப்பு செய்யும் வல்லமை வாய்ந்த 'போனோகிராபி' என்னும் சிலிண்டர் வடிவிலான கருவியை எடிசன் இன்றைய தினம்தான் கண்டுபிடித்தார்.
கேட்கும் ஒலிகளைப் பதிவு செய்து அவற்றை மீண்டும் ஒலிபரப்பு செய்யும் வல்லமை வாய்ந்த 'போனோகிராபி' என்னும் சிலிண்டர் வடிவிலான கருவியை எடிசன் இன்றைய தினம்தான் கண்டுபிடித்தார்.
ஒலிகளைப் பதிவு செய்யவதற்கான வல்லமை மின்னணு இசையுடன் தொடர்பு உடையதாகக் கருதப்பட்டு வந்திருப்பினும், இது கட்டாயம் அல்ல. நாம் அறிந்த மிக முந்திய ஒலிப்பதிவுக் கருவி, போனாட்டோகிராப் எனப்படும் கருவியாகும். இதற்கான கண்டுபிடிப்பு உரிமம் 1857 ஆம் ஆண்டில் எட்வார்ட்-லியொன் ஸ்காட் டி மார்ட்டின்வில்லி என்பவருக்கு வழங்கப்பட்டது.
ஆனாலும் இது பார்க்கக்கூடிய வடிவில் ஒலிகளைப் பதிவு செய்யக்கூடியதே அன்றி அவ்வொலிகளை மீண்டும் உருவாக்கும் வல்லமை கொண்டதல்ல. எடிசன் 1877 ஆம் ஆண்டு சிலிண்டர் வடிவிலான இசைப் பதிவு செய்யும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். இதற்கு போனோகிராப் என்று பெயர். பின்னர் அலக்ஸாண்டர் கிரகாம்பெல் அந்த கண்டுபிடிப்பை மேம்படுத்தினார்.
1878 ஆம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசன் போனோகிராப் கருவிக்கு முறையான உரிமம் பெற்றார். இக் கருவியிலும் ஸ்காட்டின் கருவியிலிருந்தது போலவே உருளை ஒன்று பயன்படுத்தப்பட்டது.