16.10.1854: இன்று புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டின் பிறந்தநாள்!
ஆஸ்கார் வைல்ட் 16.10.1854 அன்று அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில், 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த ஆங்கில- ஐரிஷ் குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
ஆஸ்கார் வைல்ட் 16.10.1854 அன்று அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில், 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த ஆங்கில- ஐரிஷ் குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சர். வில்லியம் வைல்ட் புகழ் பெற்ற காது, கண் மருத்துவர். தாயார் ஜேன் பிரான்சிஸ்கா வைல்ட் ஒரு வெற்றிகரமான எழுத்தாளர்,
ஆஸ்கார் அவருக்கு ஒன்பது வயதாகும் வரை வீட்டிலேயே கல்வி கற்றார். பின்னர் பதினாறு வயது வரை என்னிஸ்கிலன், ஃபெர்மனாக் என்னும் இடத்திலுள்ள போர்ட்டோரா ராயல் பள்ளியில் கல்வி கற்றார். போர்ட்டோராவில் படிப்பை முடித்துக் கொண்டதும் டப்ளினில் உள்ள டிரினிட்டிக் கல்லூரியில் 1871 ஆம் ஆண்டிலிருந்து 1874 ஆம் ஆண்டு வரை இலக்கியம் பயின்றார்.
சிறந்த ஐரிஷ் நாடகாசிரியராகவும், எழுத்தாளராகவும் மற்றும் கவிஞராகவும் திகழ்ந்தார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைச்சுவைத்தன்மை வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியா அரசியின் ஆட்சிக் காலத்தில், லண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். இவரது சில நாடகங்கள் இன்றும் அரங்கேறி வருகின்றன.
Advertisement
ஓரினச் சேர்க்கையாளராக இருந்த காரணத்தால் இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் பெற்றார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டியப் நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் அவர் அயர்லாந்திற்கு திரும்பவே இல்லை.
இவர் தனது நாற்பத்தி ஆறாம் வயதில் 30.11.1900 - ல் மூளைக்காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தார்