முகப்பு
இந்த நாளில்...

23.09.2016: சுவாமி தயானந்த சரஸ்வதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று!

சுவாமி தயானந்த சரஸ்வதி 15.08.1930 அன்று தமிழகத்தின் மஞ்சக்குடி கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நடராஜன் என்பதாகும்.

Updated On : 23 செப்டம்பர், 2016 at 1:00 AM
பகிர்:

சுவாமி தயானந்த சரஸ்வதி 15.08.1930 அன்று தமிழகத்தின் மஞ்சக்குடி கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நடராஜன் என்பதாகும்.

அத்வைத கருத்துக்கள் மீது ஈடுபாடு கொண்ட அவர் இளம் வயதிலேயே ஆன்மீகத்தின் பக்கம் திரும்பினார். சுவாமி சின்மயனாந்தாவின் கோட்பாடுகள் இவரைக் கவர்ந்தன.எனவே அவருடன் இணைந்து செயல்படட்டு வந்தார்.

1962ம் ஆண்டு சன்னியாசம் பெற்று சுவாமி தயானந்த சரஸ்வதி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.   மும்பையில் வேதாந்தம் கற்பதற்காக 'சாந்திபனி சதானலயா' என்ற அமைப்பை சின்மயனந்தாவும், தயானந்த சரஸ்வதியும் சேர்ந்து உருவாக்கினார்.

Advertisement

அதேபோல கோவை அருகே ஆனைக்கட்டியில் உள்ள ஆர்ஷா வித்யா குருகுலமும் இவர்களால் நிறுவப்பட்டது. இங்கு நூற்றுக்கணக்கானோர் கல்வி கற்கின்றனர். நாட்டில் உள்ள அனைத்துத் துறவிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் 'ஆச்சார்யா சபா' என்ற அமைப்பையும் நிறுவியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.