இந்த நாளில்...

19.03.2008: புகழ்பெற்ற நடிகர் ரகுவரன் இறந்த தினம் இன்று!

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார்.

DIN

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

ஆனாலும் வில்லன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளியான தமிழ்ப் படம் சில நேரங்களில். இது தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த போதைப் பழக்கம் அவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி அவரது சொந்த வாழ்க்கையையும் பாதித்தது. இதன் காரணமாக  இவர் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து சென்றார். ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT