முகப்பு
கல்வி மணி

கட்டண வசூலில் தனிப் பயிற்சி மையங்கள்

டியூஷன் மையங்கள், சிறப்புப் பயிற்சி மையங்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் பெருகி வரும் தனிப் பயிற்சி மையங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:19 PM
பகிர்:

டியூஷன் மையங்கள், சிறப்புப் பயிற்சி மையங்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் பெருகி வரும் தனிப் பயிற்சி மையங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் உள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிப் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

÷சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் என்று அனைத்து இடங்களிலும் கல்வி நிறுவனங்களைப் போல தனிப் பயிற்சி மையங்கள் பெருமளவில் இயங்கி வருகின்றன. இவை தவிர நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வீதிகள் தோறும் சிறிய அளவில் டியூஷன் மையங்கள் இயங்கி வருகின்றன.

÷தொடக்கத்தில் வேலைதேடும் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு என்று கருதப்பட்டாலும், பெரும்பாலான மையங்கள் ஒரு சில ஆண்டுகளில் தங்களது கல்விச் சேவையை மறந்துவிட்டு, அதிரடி கட்டண வசூலில் ஈடுபடுகின்றன.

 பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வர்களுக்குப் பயிற்சி அளித்து செழிப்பாக இருந்தன இந்த மையங்கள். ஆனால் நுழைவுத் தேர்வை அரசு ரத்து செய்தது இந்த தனிப் பயிற்சி மையங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

÷தற்போது பள்ளி மாணவர்களை குறிவைத்து இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் கோடை விடுமுறை தொடங்கிய சில நாள்களிலேயே பயிற்சி வகுப்புகளை போட்டி போட்டு தொடங்குகின்றன.

÷முன்பெல்லாம் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பின் மாலை நேர வகுப்புகளை இந்த மையங்கள் நடத்தி வந்தன. ஆனால், இப்போது 9-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதி முடித்த கையோடு, விட்டாச்சு லீவு...என்று உற்சாகத்துடன் வெளி வரும் மாணவர்களுக்கு இந்த மையங்கள் பிரத்யேகமாக அச்சிட்ட விண்ணப்பங்களை நீட்டி, வலை விரிக்கின்றன.

÷பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இந்த மையங்கள் தரும் உத்தரவாதத்தை நம்பி, இவர்கள் கோரும் கட்டணத்தை வேறு வழியின்றி தருகின்றனர்.

 இதையடுத்து, இந்த மாணவர்களுக்கு 10-ம் வகுப்புó மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பாடங்களில் தனிப் பயிற்சி அளிக்க பாட வாரியாகவும், மொத்தப் பாடங்களுக்கும் என கட்டணம் பெறப்படுகிறது.

÷சில மையங்கள் ஓராண்டுக்கான மொத்த கட்டணத்தையும் செலுத்துமாறு கோருகின்றன. இதில் தயக்கத்துடன் நோக்கும் பெற்றோரிடம் 3 தவணைகளாகவோ அல்லது மாதாந்திரமாகவோ கட்டணத்தை செலுத்தலாம் என்று செயற்கையான புன்னகையுடன் தெரிவிக்கின்றன.

÷சென்னையில் தனியார் பயிற்சி மையங்களில் அனைத்து பாடங்களுக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. கணக்கு, இயற்பியல் பாடங்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் மையங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 2,500 முதல் ரூ. 3,500 வரை கட்டணமாக பெறப்படுகிறது.

÷பிளஸ் டூ வகுப்புகளில் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் ஆண்டு கட்டணமாக ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

÷கோடை விடுமுறையிலேயே இந்த மையங்களில் 70 சதவீத பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு, இதன் பின் திருப்புதல் தேர்வுகளை நடத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்துக்கு பெரும்பாலான தனிப் பயிற்சி மையங்கள் ரசீதுகளை வழங்குவது இல்லை.

÷தங்களது குழந்தைகள் உயர் கல்வி வாய்ப்புகளை பெற அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற மாயை பெற்றோர்களிடையே அதிகரித்துள்ளது. இதனால், தனிப் பயிற்சி மையங்களின் காட்டில் வசூல் மழை கொட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.